ரஜினியை இயக்கும் தனுஷ்

'ஜகமே தந்­தி­ரம்' நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­னது அதன் நாய­கன் தனு­ஷுக்கு வருத்­தம் அளித்­தி­ருப்­ப­தாக கூறப்­பட்­டா­லும், ரசி­கர்­கள் என்­னவோ உற்சா­க­மா­கத்­தான் உள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் முன்­னணி 'ஓடிடி' தளத்தில் வெளி­யி­டப்­பட்­டது 'ஜகமே தந்­தி­ரம்'. வழக்­கம்­போல் தனுஷ் ரசிகர்­க­ளி­டம் இருந்து பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், இயக்­கு­நர் கார்த்­திக் சுப்­பு­ரா­ஜு­டன் பணி­யாற்­றிய ஒவ்­வொரு தரு­ணத்­தை­யும் தாம் மிக­வும் நேசித்­த­தாக கூறி­யுள்­ளார் தனுஷ்.

இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், 'ஜகமே தந்­தி­ரம்' படத்­தில் தமக்கு சுருளி என்ற கதா­பாத்­தி­ரத்தை வழங்­கிய இயக்­கு­ந­ருக்கு நன்றி தெரி­விப்­ப­தாக குறிப்­பிட்­டுள்­ளார்.

"உங்­க­ளு­டன் பணி­பு­ரிந்­த­தும் மிக­வும் கொடூ­ர­மான குண்­டர் கும்­பல் தலை­வன் சுருளி கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­த­தும் மறக்க இய­லாத அனு­ப­வங்­கள். உங்­க­ளு­டன் இருந்த ஒவ்­வொரு தரு­ணத்­தை­யும் நான் ரசித்­தேன். எல்­லாப் புக­ழும் உங்­க­ளை­யும் படக்­கு­ழு­வி­ன­ரை­யுமே சாரும்," என்று தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார் தனுஷ்.

இந்­நி­லை­யில், முதன்­மு­றை­யாக நேரடி தெலுங்­குப் படத்­தில் நடிக்க உள்­ளார். கோலி­வுட், பாலி­வுட், ஹாலி­வுட் என அனைத்­துத் தளங்­க­ளி­லும் அசத்தி வரு­கி­றார் தனுஷ்.

தெலுங்­கில் பல­முறை வாய்ப்பு கிடைத்­தும் இவர் கால்­ஷீட் பிரச்­சி­னை­யால் நடிக்க முடி­ய­வில்லை. இப்­போது பிர­பல தெலுங்கு இயக்­கு­நர் சேகர் கமுலா தன் படத்­தில் நடிக்­கக் கேட்டு தனுஷை அணு­கி­யுள்­ளார்.

நேர­டித் தெலுங்­குப் படத்தை தமி­ழி­லும் இந்­தி­யி­லும் மொழி­மாற்­றம் செய்ய உள்­ள­னர். இதில் தனுஷ் ஜோடி­யாக சாய் பல்­லவி நடிக்­கி­றார். இது­கு­றித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யாகி உள்­ளது.

தற்­போது 'தி கிரே மேன்' எனும் ஹாலி­வுட் படத்­தில் நடித்­து­வ­ரும் தனுஷ், அடுத்து கார்த்­திக் நரேன், மாரி செல்­வ­ராஜ், 'ராட்­ச­சன்' புகழ் ராம்­கு­மார் ஆகி­யோ­ரு­டன் அடுத்­த­டுத்து இணைந்து பணி­யாற்ற உள்­ளார்.

பின்­னர் தமது மூத்த சகோ­த­ரர் செல்­வ­ரா­வ­கன் இயக்­கத்­தி­லும் இரண்டு படங்­களில் நடிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, 'ஜகமே தந்­தி­ரம்' படம் வெற்­றி­பெற 'அவெஞ்­சர்ஸ்' ஹாலி­வுட் படத்­தின் இயக்­கு­நர்­கள் வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர்.

உல­கம் முழு­வ­தும் 190 நாடு­களில் 17 மொழி­களில் வெளி­யாகி உள்­ளது இப்­படம். தமி­ழில் வேறு எந்­தப் பட­மும் இதைச் சாதித்­துள்­ளதா என்­பது தெரி­ய­வில்லை என தனுஷ் ரசி­கர்­கள் சமூக வலைத்­தளங்­களில் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், 'அவெஞ்­சர்ஸ்', 'இன்­ஃபி­னிட்டி வார்', 'எண்ட் கேம்' உள்­ளிட்ட திரைப்­ப­டங்­களை இயக்­கிய சன் அந்­தோணி, ஜோ ரூசோ ஆகிய இரு­வ­ரும் தனுஷை வாழ்த்தி சமூக வலைத்­த­ளத்­தில் பதி­விட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, 'ஜகமே தந்­தி­ரம்' குறித்து கல­வை­யான விமர்­ச­னங்­கள் வெளி­வந்­துள்­ளன. இதில் கார்த்­திக் சுப்­பு­ரா­ஜின் வழக்­க­மான திரைக்­கதை பின்­பற்­றப்­ப­ட­வில்லை என்று சிலர் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

தனு­ஷின் இயல்­பான, ரசி­கர்­களை மிர­ளச் செய்­யும் நடிப்­புக்­காக அவ­ருக்கு மீண்­டும் சிறந்த நடி­க­ருக்­கான இந்­திய திரைப்­பட தேசிய விருது கிடைக்க வாய்ப்­புள்­ள­தாக இன்­னொரு தரப்­பி­ன­ரும் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, ரஜி­னி­யை­யும் தனு­ஷை­யும் வைத்து ஒரு படத்தை இயக்க தாம் தயா­ராக இருப்­ப­தாக கூறி­யுள்­ளார் கார்த்­திக் சுப்­பு­ராஜ். அதற்­கேற்ற கதையை உரு­வாக்கி இருப்­ப­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ளார்.

மருத்­து­வப் பரி­சோ­த­னைக்­காக அமெ­ரிக்கா சென்­றுள்­ளார் ரஜினி. அவரை அங்கு சந்­தித்­துப் பேசத் திட்­ட­மிட்­டுள்­ளா­ராம் தனுஷ்.

அனே­க­மாக அந்­தச் சம­யத்­தில் கார்த்­திக் சுப்­பு­ராஜ் உரு­வாக்­கி­யுள்ள கதையை அவர் ரஜி­னி­யி­டம் விவ­ரிக்க வாய்ப்­புள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

இதற்கிடையே, ரஜினியின் அடுத்த படத்தை தனுஷ் இயக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!