திரைத் துளி­கள்

மீண்டும் இணைந்த நட்சத்திர ஜோடி

விவாகரத்து பெற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஞ்சித்தும் நடிகை பிரியா ராமனும் திருமண நாளன்று சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

'நேசம் புதுசு' திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இருவரும் தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகின்றனர். திருமண நாளில் ஒன்று சேர்ந்த இந்த ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

திகில் படத்தில் நடித்த பரத்

நடிகர் பரத் நடித்துள்ள புதுப்படத்துக்கு 'லாஸ்ட் 6 ஹவர்ஸ்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் இவருக்கு ஜோடியாக விவியா சந்த் நடித்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் அனு காலிப்பும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம்.

திகில் கதையுடன் உருவாகியுள்ள இப்படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் ஒருசேர உருவாக்கி உள்ளனர்.

இந்நிலையில், தணிக்கையில் இப்படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாம். எனவே, இப்படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரது நடிப்பில் வெளியான காளிதாஸ் படத்துக்கு வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது வெளியாகும் புதுப்படமும் வெற்றி பெறும் என நம்புகிறாராம் பரத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!