புதுப்படங்கள், புது அறிவிப்புகள்

புதுப்படங்கள், புது அறிவிப்புகள்

2 mins read

திரைப்­ப­டங்­க­ளைத் தயா­ரிப்­ப­தை­விட அதை வெளி­யி­டு­வ­து­தான் பெரிய சவால் என்­கி­றார்­கள் தயா­ரிப்­பா­ளர்­கள்.

அத­னால் ஒரு படத்­துக்­கான பணி­க­ளைத் துவங்­கும் நாள் முதல் அதன் வெளி­யீடு வரை பல்­வேறு வித­மான விளம்­பர உத்திகளைக் கையாள வேண்­டி­யுள்­ளதாகச் சொல்­கிறார்­கள்.

புதுப்­ப­டங்­கள் குறித்து அவ்­வப்­போது ஏதா­வது அதி­ர­டி­யான அல்­லது ரசிகர்­க­ளைக் கவ­ரக்­கூ­டிய வகை­யில் புதுப்­புது அறி­விப்­பு­கள், தக­வல்­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன. அத்­த­கைய சில தக­வல்­க­ளின் தொகுப்பு இது.

நடிகை ஆண்ட்ரியா (படம்) புதுப்­ப­டம் ஒன்­றில் கதைக்­குத் தேவைப்­பட்­ட­தால் அரை நிர்­வா­ண­மாக நடித்துள்­ளா­ராம். மிஷ்­கின் இயக்­கத்­தில் உரு­வா­கும் 'பிசாசு 2' படத்­துக்­காக அவர் இவ்­வாறு துணிந்து நடித்துள்ளார்.

இந்­தப் படத்­தில் பல அதி­ர­டி­யான காட்­சி­கள் இருக்­கும் என இயக்­கு­நர் மிஷ்­கின் தொடக்­கத்­தி­லேயே கூறி­விட்­டா­ராம். கதைக்­கேற்ற காட்சி என்­றால் தமக்­கும் தயக்­க­மில்லை என்று ஆண்ட்­ரியா கூறி­யுள்­ளார்.

அண்­மை­யில் கடை­சி­யாக நடத்­தப்­பட்ட படப்­பி­டிப்­பின்­போது குறிப்­பிட்ட அரை நிர்­வா­ணக் காட்சி­யைப் பட­மாக்கி உள்­ள­னர்.

அப்­போது எந்­தத் தயக்­க­மும் இன்றி அதில் நடித்­துள்­ளார் ஆண்ட்­ரியா. கடந்த 2019ஆம் ஆண்­டில் வெளி­யான 'ஆடை' படத்­தில் நடிகை அம­லா ­பா­லும் இவ்­வாறு சில காட்­சி­களில் நடித்­தி­ருந்­தார்.

விஜய் நடித்­து­வ­ரும் 'தள­பதி 65' படத்­தின் முதல் தோற்­றச் சுவ­ரொட்டி ஜூன் 21ஆம் தேதி (நாளை) வெளி­யி­டப்­பட உள்­ளது. நெல்­சன் இயக்­கத்­தில் விஜய் நடித்­து­வ­ரும் இப்­படத்­துக்கு இன்னும் தலைப்பு வைக்­கப்­ப­ட­வில்லை. சன் பிக்­சர்ஸ் நிறு­வ­னம் தயா­ரிக்­கிறது. பூஜா ஹெக்டே, அபர்ணா­ தாஸ், விடிவி கணேஷ் உள்­ளிட்­டோர் முக்­கிய கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகி உள்­ள­னர்.

கொரோனா ஊர­டங்­கால் படப்­பி­டிப்பு நிறுத்­தப்­பட்ட நிலை­யில் ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்­தும் வித­மாக முதல் தோற்­றச் சுவ­ரொட்டி வெளி­யி­டப்­படும் என இயக்­கு­நர் நெல்­சன் அறி­வித்­துள்­ளார். இது­தொ­டர்­பான அறி­விப்பை ரசி­கர்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லா­கப் பகிர்ந்து வரு­கின்­ற­னர்.

வெற்­றி­மா­றன் இயக்­கத்­தில் சூர்யா நடிக்­கும் 'வாடி­வா­சல்' படத்­தின் படப்­பி­டிப்பு செப்­டம்­பர் மாதம் தொடங்­கு­கிறது. மிகக் குறு­கிய காலத்­தில் படப்­பி­டிப்பை நடத்தி முடிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளா­ராம் வெற்­றி­மா­றன்.

ஊர­டங்கு தளர்­வு­கள் எத்­தனை நாள் நீடிக்­கும் என்­பது யாரா­லும் தீர்­மா­னிக்க இய­லாது. எனவே கிடைத்த கால அவ­கா­சத்­தைப் பயன்­ப­டுத்தி இரண்டு படங்­களை முடிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளார் வெற்­றி­மா­றன்.

தற்­போது சூரி நாய­க­னா­க­வும் விஜய் சேது­பதி முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தி­லும் நடிக்­கும் 'விடு­தலை' படத்தை வெற்­றி­மா­றன் இயக்கி வரு­கி­றார். இதன் இறு­திக்­கட்­டப் படப்­பி­டிப்பு மட்­டுமே மிஞ்­சி­யுள்­ளது. எனவே, ஊர­டங்கு தளர்­வு­கள் மூலம் கிடைக்­கும் அவ­கா­சத்­தில் முதற்­கட்­ட­மாக இப்­ப­டத்தை முடிக்க உள்­ளா­ராம்.

இதற்­கி­டையே, கமல்­ஹாச­னும் மீனா­வும் மீண்­டும் இணைந்து நடிக்க உள்­ள­னர். மலை­யா­ளத்­தில் வெற்றி பெற்ற 'த்ரிஷ்­யம்' படத்தின் இரண்­டாம் பாகத்தை தமி­ழில் மறு­பதிப்பு செய்ய உள்­ள­னர். ஏற்­கெ­னவே முதல் பதிப்பு 'பாபநாசம்' என்ற தலைப்பில் உரு­வாகி வெற்றி பெற்­றுள்­ளது. அதில் கம­லும் கௌத­மி­யும் இணைந்து நடித்­தி­ருந்­த­னர்.

இரண்­டாம் பாகத்­தி­லும் கமலே நாய­க­னாக நடிக்க, கௌத­மிக்கு பதில் மீனாவை ஒப்­பந்­தம் செய்ய உள்ளனர். இருவரும் 1996ஆம் ஆண்டு 'அவ்வை சண்­முகி' படத்­தில் இணைந்து நடித்தனர்.