ஒருவழியாக மீண்டும் நடிக்க வருகிறார் வடிவேலு. அனேகமாக 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் உருவான அந்தப் படம் விமர்சன, வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு அதன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க முன்வந்தார் இயக்குநர் சங்கர்.
பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் இயக்குநர் சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இப்படத்தில் இருந்து விலகுவதாக வடிவேலு அறிவித்தார்.
அதன் பிறகு தயாரிப்பாளருக்கு நஷ்டம், இயக்குநருக்கு கோபம், வடிவேலுவின் பிடிவாதம் என்று பலவிதமான சிக்கல்கள் நிலவின.
இந்நிலையில் சமசர முயற்சியில் ஈடுபட்டார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' என்று தலைப்பில் சிறு மாற்றம் செய்யப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளிவரக்கூடும்.

