ராஷி: கவனமாக இருந்தால் சிக்கல் இல்லை

1 mins read
f18ad4e0-c1f5-4c58-84ff-72e7466ab37f
-

மன­தில் கொரோனா தொற்று குறித்த பயம் இருந்­தா­லும் தன்னை ஒப்­பந்­தம் செய்த தயா­ரிப்­பா­ள­ருக்கு நஷ்­டம் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக 'தேங்க்யூ' என்ற தெலுங்­குப் படத்­தின் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­ற­தாக தெரி­வித்­துள்­ளார் ராஷி கண்ணா.

அண்­மை­யில் இந்­தப் படப்­பி­டிப்பு ஐரோப்­பா­வில் நடை­பெற்­றது. படப்­பி­டிப்பு முடிந்து நாடு திரும்­பி­ய­தும் கொரோனா பரி­சோ­தனை செய்து கொண்­டா­ராம்.

"நல்­ல­வே­ளை­யாக தொற்று பாதிப்பு ஏதும் இல்லை. கொரோ­னா­வுக்கு பயந்து எத்­தனை நாட்­கள்­தான் வீட்­டி­லேயே பயந்து முடங்­கிக் கிடக்க முடி­யும்.

"படப்­பி­டிப்­பின்­போது ஓரி­டத்­தில் இருந்து மற்­றொரு இடத்­துக்கு நடந்து செல்­லும்­போது கூட சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பிடித்­தோம். 30 நாட்­கள் படப்­பி­டிப்பு நடந்­த­போது கூடு­மா­ன­வரை உள்ள­ரங்­கு­க­ளி­லேயே காட்­சி­கள் எடுக்­கப்­பட்­டன.

"ஒரே சம­யத்­தில் முப்­ப­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் பணி­யில் ஈடு­ப­ட­வில்லை. இப்­படி முன்­னெச்ச­ரிக்­கை­யு­டன் கவ­ன­மா­க­வும் திட்­ட­மிட்­டும் செயல்­பட்­டால் பய­மில்­லா­மல் பணி­யாற்ற முடி­யும். படப்­ப­ணி­கள் பாதிக்­கா­மல் இருந்­தால் சினிமா தொழி­லா­ளர்­க­ளின் பிரச்­சி­னை­கள் ஓர­ள­வே­னும் குறை­யும்," என்­கி­றார் ராஷி கண்ணா.