'மாநாடு' படத்துக்கான பின்னணிக் குரல் பதிவைத் தொடங்கி உள்ளார் சிம்பு.
இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ள நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதி
கரித்துள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ளது 'மாநாடு'.
இப்படத்தில் அரசியல் நெடி இருக்கும் என்றும் 'மங்காத்தா' போல் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்றும் பலவிதமான ஆரூடங்கள் நிலவுகின்றன. ஆனால், படக்குழுவினர் எதுகுறித்தும் இதுவரை வாய்திறக்கவில்லை.
இதற்கிடையே 'மாநாடு' படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சிறு வயதில் சிம்பு நடித்த படங்களை தாம் ஆர்வத்துடன் பார்த்ததாகக் கூறுகிறார்.
"சிம்பு சார் நடித்த 'சரவணா' படம் வெளியானபோது நான் பள்ளிக்கூட மாணவி. படம் வெளியானது தெரிந்ததும் எப்படியாவது உடனுக்குடன் பார்த்துவிட வேண்டும் என்று நானும் தோழிகளும் திட்டம் போட்டோம்.
"இதையடுத்து அனைவரும் ஒருநாள் பள்ளிக்குப் போகாமல் மொத்தமாக கிளம்பிச் சென்று 'சரவணா' படத்தை திரையரங்கில் பார்த்தோம்.
"அதுபோன்ற உற்சாகத் தரு ணங்கள் வாழ்க்கையில் அடிக்கடி கிடைத்துவிடாது. எப்போதாவது அனுபவிக்கும் தருணங்களை வாழ் நாள் முழுதும் மறக்க இயலாது," என்கிறார் பிரியா பவானி சங்கர்.
'மாநாடு' படம் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் வெளியாக உள்ளது.

