'நஷ்டம் ஏற்படக்கூடாது'

3 mins read

ஒரு­பக்­கம் தெலுங்­கில் அசத்­திக்­கொண்டே மற்­றொரு பக்­கம் இந்­தி­யி­லும் கலக்­கிக் கொண்­டி­ருக்­கி­றார் ராஷ்­மிகா மந்­தனா.

தற்­போது மூன்று இந்­திப் படங்­களில் நடித்­துக்கொண்­டி­ருப்­ப­வர் மேலும் சில கதை­க­ளைக் கேட்டு வரு­கி­றா­ராம். அனே­க­மாக இந்த ஆண்டு இறு­திக்­குள் அவர் மேலும் சில இந்­திப் படங்­களில் ஒப்­பந்­த­மா­வார் என்­கி­றார்­கள் பாலி­வுட் விவ­ரப் புள்­ளி­கள்.

ராஷ்­மி­கா­வின் முதல் பட­மான 'கிரிக் பார்ட்டி' கடந்த 2016இல் வெளி­யா­னது. இந்­தப் படத்­தின் மொத்த தயா­ரிப்­புச் செலவே நான்கு கோடி ரூபாய்­தான். ஆனால், 30 கோடி ரூபாய் வசூல் கண்­டது. மேலும் கர்­நா­டக அர­சின் சிறந்த மாநில நடி­கைக்­கான விரு­தை­யும் பெற்­றார் ராஷ்­மிகா.

இதன் பிறகே தெலுங்­கில் நடிக்­கும் வாய்ப்பு கிடைத்­தது. 2018இல் வெளி­யான 'ஹலோ' தெலுங்­குப் படம் தெலுங்­கில் அவரை உச்­சத்­துக்கு கொண்டு சென்­றதை அடுத்து அவ­ரது வேகத்­தை­யும் வளர்ச்­சி­யை­யும் தடுக்க யாரும், எது­வும் குறுக்கே வர­வில்லை.

தமி­ழில் இவர் நடித்த 'சுல்­தான்' படம் எதிர்­மறை விமர்­ச­னங்­க­ளைப் பெற்­றா­லும் ராஷ்­மி­கா­வுக்­கான வாய்ப்­பு­கள் என்­னவோ குறைந்­த­தா­கத் தெரி­ய­வில்லை.

பெரிய நடிகை என்று பெய­ரெ­டுத்து விட்­ட­தால் தேடி­வ­ரும் அனைத்து வாய்ப்­பு­க­ளை­யும் தாம் ஏற்­ப­தில்லை என்­கி­றார் ராஷ்­மிகா. திரைத்­து­றைக்கு வந்து ஐந்து ஆண்­டு­கள் நிறை­வ­டைந்த போதி­லும் இது­வரை 10 படங்­களில் மட்­டுமே நடித்­தி­ருப்­ப­தைச் சுட்­டிக் காட்­டு­கி­றார்.

தனக்கு ஏற்ற கதை­களைத் தேர்வு செய்­யும் பொறுமைதான் வெற்றிக்குக் கார­ணம் என விமர்சகர்­கள் சொல்­வதை தாம் ஏற்­றுக்­கொள்­வ­தா­கச் சொல்­ப­வர், தற்­போது 'புஷ்பா', 'ஆட­வாலு', 'மீக்கு ஜோகர்லு' ஆகிய தெலுங்கு படங்­களில் நடித்து வரு­கி­றார்.

இவர் நடித்து இந்­தி­யில் இன்­னும் ஒரு படம் கூட வெளி­யா­க­வில்லை. அதற்­குள் கைவ­சம் மூன்று இந்­திப் படங்­கள் வைத்­துள்­ளார்.

'கிஷன் மஜ்னு' படத்­தில் பாலி­வுட் இளம் நாய­கன் சித்­தார்த் மல்­ஹோத்­ரா­வு­ட­னும் 'குட்பை' படத்­தில் அமி­தாப்­பச்­ச­னு­ட­னும் நடித்­துக்கொண்­டி­ருப்­ப­வர், பிர­பல பாலி­வுட் தயா­ரிப்­பா­ளர் ஷாஜித் நதியாக்­வாலா படத்­தி­லும் நாய­கி­யாக ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

"இந்த மூன்று படங்­க­ளுமே அடுத்த ஆண்டு அடுத்­த­டுத்து வெளி­யா­கும். அதன்­பின்­னர் நான் இந்­திப் பட உல­கின் முன்­னணி நடி­கை­யா­வேன் என்று சிலர் சொல்­லிக்கொண்­டி­ருக்­கி­றார்­கள். அப்படி எல்­லாம் பெயர் வாங்­க­வேண்­டும் என்­பது எனது லட்­சி­யம் அல்ல.

"என்னை வைத்­துப் பட­மெ­டுப்­ப­வர்­கள் நஷ்­ட­ம­டை­யக்­கூ­டாது. அதி­கம் சம்­பா­திக்­கும் ஆசை­யில் ரசி­கர்­க­ளின் ரச­னையை வீண­டித்து விடக்­கூ­டாது என்­ப­தில் மட்­டுமே எனது கவ­னம் உள்­ளது. தொடர்ந்து நல்ல படங்­களில் நடிக்க விரும்­பு­கி­றேன்," என்­கி­றார் ராஷ்­மிகா.

இவர் நடித்­து­வ­ரும் மூன்று படங்­களும் வெற்றி பெற்ற பின்­னர் ராஷ்­மி­கா­வின் சம்­ப­ளம் தெலுங்­கில் அவர் பெறு­வ­தை­விட இரு மடங்­கா­கும் என்­கி­றார்­கள் இந்­தித் திரை­யு­லக விவ­ரப் புள்­ளி­கள். தெலுங்­கில் ராஷ்­மிகா குறைந்­த­பட்­சம் இரண்டு கோடி ரூபாய் சம்­ப­ளம் பெறு­வ­தா­க கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே இந்தி நடிகை டாப்சி உற்­சா­கத்­தில் திளைத்­துக்கொண்­டி­ருக்­கி­றார். இவர் நடித்த ஆறு இந்­திப் படங்­கள் தொடர்ந்து வெற்றி பெற்­ற­து­தான் இவ­ரது மகிழ்ச்­சிக்­குக் கார­ணம். இத­னால் 5 கோடி சம்­ப­ளம் வாங்கி வந்த அவர், இப்­போது எட்டு கோடி ரூபாய் கேட்­கி­றா­ராம். நல்ல கதைக்­கரு உள்ள படங்­களை மட்­டுமே தேர்வு செய்து நடிக்­கி­றார் டாப்சி.

தற்­போது 'ரேஷ்மி ராக்­கெட்' என்ற படத்­தில் நடித்து வரு­ப­வர், இது விளை­யாட்­டுத் துறை­யில் பெண்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­களை அல­சும் கதை என்­ப­தால் நடிக்க ஒப்­புக்­கொண்­ட­தா­கச் சொல்­கி­றார். தமிழ் இயக்­கு­நர் நந்தா பெரி­ய­சாமி எழு­தி­யுள்ள கதையை ஆகாஷ் குரானா இயக்கி உள்­ளார். இந்­தப் படம் தனது திரை­யு­ல­கப் பய­ணத்­தில் முக்­கிய மைல் கல்­லாக இருக்­கும் என்­கி­றார் டாப்சி.