தந்தையர் தினம்: வாழ்த்திய ஷ்ருதி
தந்தையர் தினத்தையொட்டி சமூக வலைத்தளங்களில் ஷ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. தாம் ஆசிர்வதிக்கப்பட்ட பெண் என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"உங்களை அதிகம் கற்றுக்கொள்ள வைக்கும் நபரும் உங்களை அதிகம் சிரிக்க வைக்கும் நபரும் உங்களுடைய பெற்றோராக இருந்தால் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம்.
"அப்பா... இனிய தந்தையர் தின வாழ்த்துகள்," என்று ஷ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவைப் பாராட்டி பலர் பின்னூட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஷ்ருதி.
ரூ.25 கோடிக்கு விற்கப்பட்ட படம்
சத்தமில்லாமல் மூன்று புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் நயன்தாரா.
இதற்கிடையே அவரது நடிப்பில் உருவாகி உள்ள 'நெற்றிக்கண்' படம் 25 கோடி ரூபாய்க்கு விற்பனை யாகி உள்ளதாகத் தகவல்.
தற்போது 'அண்ணாத்த', 'காத்து வாக்கில ரெண்டு காதல்' ஆகிய படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்து 'லூசிஃபர்' மலையாளப் படத்தின் தெலுங்கு மறுபதிப்பு, நாயகியை முன்னிலைப்படுத்தும் இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 'நெற்றிக்கண்' படத்தை மிலிந்த்ராவ் இயக்கி உள்ளார். இது 'பிளைண்ட்' என்ற கொரிய மொழிப் படத்தின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. கண் பார்வையற்ற நயன்தாரா ஒரு சைக்கோ கொலைகாரனைப் பழிவாங்குவதுதான் கதையாம். இதன் விநியோக உரிமை 25 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது.

