'சினம்': யதார்த்தமான படம்

'சினம்': யதார்த்தமான படம்

1 mins read
cb822945-cdca-46e2-9daf-6612e1b49070
'சினம்' படத்தில் அருண் விஜய், பாலக் லால்வானி. -

அருண் விஜய் நடித்து அடுத்து திரைக்கு வரும் படம் 'சினம்'.

ஜி.என்.ஆர்.கும­ர­வே­லன் திரைக்­கதை எழுதி இயக்கி உள்­ளார்.

"இது யதார்த்­த­மான கதை­யம்­சம் கொண்ட படம். காவல்­து­றையை மைய­மாக வைத்து ஏற்­கெ­னவே வெளி­யான படங்­களில் இருந்து மாறு­பட்­ட­தாக இருக்­கும்.

"நாட்­டில் தற்­போது பாதிப்பை ஏற்­ப­டுத்தி உள்ள ஒரு பிரச்­சினை குறித்து அலசி உள்­ளோம். கதை நாய­கன் 'பாரி­வெங்­கட்' கதா­பாத்­தி­ரம் நியா­யத்தை மட்­டுமே பேசும் வகை­யில் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

"பாலக் லால்­வானி நாய­கி­யாக நடித்­துள்­ளார். கதைக்­கேற்ற நடிப்பை வழங்­கி­யுள்­ளார்," என்­கி­றார் இயக்­கு­நர் கும­ர­வே­லன்.

இப்­ப­டத்­துக்கு தணிக்­கை­யில் 'யு/ஏ' சான்­றி­தழ் வழங்கி உள்­ள­னர்.