'தல', 'தளபதி' படத் தகவல்கள்

'தல', 'தளபதி' படத் தகவல்கள்

2 mins read

'தள­பதி 65' படத்­தின் படப்­பி­டிப்பை விரை­வில் தொடங்­க­லாம் என்று பச்­சைக்­கொடி காட்டி உள்­ளா­ராம் விஜய். இதை­ய­டுத்து சென்னை வட­ப­ழ­னி­யில் இரண்­டாம் கட்­டப் படப்­பி­டிப்­பைத் துவங்க ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

ஜார்­ஜியா நாட்­டில் முதல்­கட்­டப் படப்­பி­டிப்பை முடித்த பிறகு சென்­னை­யில் படப்­பி­டிப்பை நடத்த திட்­ட­மிட்­டி­ருந்­தார் இயக்­கு­நர் நெல்­சன்.

இந்­நி­லை­யில் ஊர­டங்கு கார­ண­மாக பணி­கள் முடங்­கிப்­போ­யின. இத­னால் முத­லில் வருத்­த­ம­டைந்த விஜய் ரசி­கர்­கள் மன­தைத் தேற்­றிக்­கொண்டு அவ­ரது பிறந்­த­நா­ளைக் கொண்­டாட தயா­ராகி வந்­த­னர்.

இந்­நி­லை­யில் தமி­ழ­கத்­தில் கொரோனா பாதிப்பு நன்கு கட்­டுக்­குள் வந்­துள்­ளது. ஊர­டங்கு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்டு வரு­வ­தால் ஜூலை மாதம் படப்­பி­டிப்­பைத் துவங்க சம்­ம­தித்­துள்­ளார் விஜய்.

இதற்­கி­டையே 'கோல­மாவு கோகிலா', 'டாக்­டர்' படங்­க­ளைத் தொடர்ந்து 'தள­பதி 65'க்கும் வித்­தி­யா­ச­மான தலப்பு வைக்க தனது குழு­வி­ன­ரு­டன் ஆலோ­சனை நடத்தி வரு­கி­றார் நெல்­சன். இரண்­டாம் கட்­டப் படப்­பி­டிப்­புக்­காக சென்னை வட­ப­ழனி பகு­தி­யில் பிர­ம்மாண்ட அரங்­கம் அமைக்­கும் பணி முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­ற­தாம்.

முன்­ன­தாக செப்­டம்­ப­ரில் படப்­பி­டிப்பை நடத்­த­லாம் என்று முடிவு செய்­தி­ருந்த படத்­தின் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான சன் பிக்­சர்ஸ் அதற்கு முன்­பா­கவே பணி­கள் தொடங்­கப்­பட்­ட­தால் மகிழ்ச்சி அடைந்­துள்­ளது.

இம்­முறை ஆகக் குறைந்த தொழி­லா­ளர்­கள், தொழில்­நுட்­பக் குழுவை வைத்­துக் காட்­சி­க­ளைப் பட­மாக்க உள்­ள­னர். முத­லில் விஜய்­யும் கதா­நா­யகி பூஜா­வும் இணைந்து நட­ன­மா­டும் பாடல் காட்­சி­தான் எடுக்­கப்­ப­டு­கிறது. நடப்­பாண்டு இறு­திக்­குள் படத்தை முடித்து ஏப்­ரல் 14ஆம் தேதி தமிழ் வரு­டப் பிறப்­புக்­குப் படத்தை வெளி­யி­டத் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தக­வல்.

இதற்­கி­டையே அஜித்­தின் 'வலிமை' படத்­தின் இறு­திக்­கட்ட பணி­களும் வேக­மெ­டுத்­துள்­ளன. இப்­ப­டத்­தில் தெலுங்­குத் திரை­யு­லக நாய­கன் கார்த்­தி­கேயா வில்­ல­னாக நடித்­துள்­ளார். இவர் அஜித்­தின் தீவிர ரசி­கர் என்­ப­தும் 'வலிமை' படத்­துக்­காக 'சிக்ஸ் பேக்' உடற்­கட்­டோ­டும் தயா­ராகி உள்­ளார் என்­ப­தும் தெரிந்த சங்­க­தி­கள்.

படப்­பி­டிப்பு முடி­யும்­வரை கடும் உண­வுக் கட்­டுப்­பாட்­டைப் பின்­பற்றி வரு­கி­றார். அவ­ரது அர்ப்­ப­ணிப்­பைக் கண்டு நெகிழ்ந்­து­போன அஜித், கடைசி நாள் படப்­பி­டிப்­பின்­போது தன் கைப்­பட பிரி­யாணி தயா­ரித்து கார்த்­தி­கே­யா­வுக்கு விருந்து வைத்­துள்­ளார்.

'இன்று ஒரு­நாள் எனக்­காக உங்­கள் உண­வுக் கட்­டுப்­பாட்­டைக் கைவிட்டே ஆக­வேண்­டும்' என்று வற்­பு­றுத்தி, தாமே பிரி­யா­ணி­யைப் பரி­மாறி கார்த்­தி­கே­யாவை அன்­பால் திக்­கு­முக்­காட வைத்­தா­ராம் அஜித்.

'வலிமை'யில் ஐந்து அதி­ர­டி­யான சண்­டைக்­காட்­சி­கள் இடம்­பெற்­றுள்­ளன. இவற்­றுள் மூன்று சண்­டை­கள், துரத்­தல் காட்­சி­களை ஹைத­ரா­பாத்­தி­லும் மீத­முள்ள இரண்டு சண்­டை­களை சென்­னை­யி­லு­மாக பட­மாக்கி உள்­ள­னர்.

அநேக­மாக இந்த ஆண்டு இறு­திக்­குள் 'வலிமை' முழுத் தெம்­பு­டன் வெளி­யீடு காணத் தயா­ரா­கி­வி­டும் என படத் தயாரிப்பு தரப்பில் கூறப்­ப­டு­கிறது.