நடிகர் விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் தர்ணா

நடிகர் விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் தர்ணா

1 mins read
a84d1b77-01d8-48b4-899e-ff3d1ad8b525
நடிகர் விஜய் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபடும் ரசிகர்கள். படம்: தமிழக ஊடகம் -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் விஜய், இன்று (ஜூன் 22) தமது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையொட்டி அவர் தற்போது நடித்துவரும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்', 'செகண்ட் லுக்' போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு போஸ்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டின் முன் இன்று ரசிகர்கள் சிலர் குவிந்தனர். வீட்டிலிருந்து வெளியில் வந்து விஜய் தங்களைப் பார்க்க கோரிக்கை விடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதைக் காட்டும் புகைப்படங்கள் தமிழக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

தர்ணாவில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை போலிசார் பின்னர் அப்புறப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்