'நயன்தாராவின் தன்னம்பிக்கை பிடிக்கும்'

'நயன்தாராவின் தன்னம்பிக்கை பிடிக்கும்'

1 mins read
813a30b9-bd73-47ed-96bb-2d597af8cfff
நயன்தாரா, விக்னேஷ் சிவன். -

நயன்­தா­ரா­வி­டம் தமக்­குப் பிடித்­த­மான விஷ­யம் அவ­ரது தன்­னம்­பிக்­கை­தான் என்று இயக்­கு­நர் விக்­னேஷ் சிவன் கூறி­யுள்­ளார்.

இன்ஸ்­ட­கி­ரா­மில் ரசி­கர்­கள் எழுப்­பிய பல்­வேறு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த அவர், தாம் இயக்­கிய 'லவ் பண்ணா உட்­ற­னும்' குறும்­படத்­தின் இரண்­டாம் பாகத்தை எடுக்க திட்­ட­மிட்டு வரு­வ­தாக குறிப்­பிட்­டுள்­ளார்.

"நயன்­தாரா பல வெற்­றிப்­ப­டங்­க­ளைத் தந்­துள்­ளார். முன்­னணி நடி­கை­யாக உள்­ளார். அவ­ரது தன்­னம்­பிக்­கை­தான் இதன் பின்­ன­ணி­யில் உள்­ளது. அத­னால் அது என்­னைக் கவர்ந்­துள்­ளது," என்று விக்­னேஷ் சிவன் கூறி­யுள்­ளார்.

சாதி ஆண­வக் கொலை­களை மைய­மாக வைத்து உரு­வான 'பாவக் கதை­கள்' என்­கிற ஆந்­தா­லஜி (குறும்­ப­டங்­க­ளின் தொகுப்பு) அண்­மை­யில் வெளி­யா­னது. இதில் கவு­தம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்­கரா ஆகி­யோ­ரு­டன் சேர்ந்து விக்­னேஷ் சிவ­னும் பங்­கேற்­றார்.

இவ­ரது 'லவ் பண்ணா உட்­ற­னும்' பகுதி மட்­டுமே நகைச்­சு­வை­யு­டன் உரு­வாகி இருந்­தது. அதில் அஞ்­சலி இரட்டை வேடங்­க­ளி­லும் கல்கி கேக்லா, பதம் குமார் உள்­ளிட்­டோ­ரும் நடித்­தி­ருந்­த­னர். பல­ரும் இக்­கு­றும்­ப­டத்­தைப் பாராட்டி உள்­ள­னர். இந்­நி­லை­யில் அதன் இரண்­டாம் பகு­தியை எடுக்க திட்­ட­மிட்­டுள்­ளார். இதில் நயன்­தாரா நடிக்க வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. விரை­வில் அறி­விப்பு வெளி­யா­கக்­கூ­டும்.