கோடம்பாக்கத்தில் மீண்டும் புது உற்சாகம்

கோடம்பாக்கத்தில் மீண்டும் புது உற்சாகம்

2 mins read

ஊர­டங்கு தளர்­வு­களை அடுத்து திரைப்­ப­டப் பணி­களை, குறிப்­பாக படப்­பி­டிப்­பைத் தொடங்க தமி­ழக அரசு அனு­மதி அளித்­துள்­ளது.

இதை­ய­டுத்து கோடம்­பாக்­கத்­தில் எங்கு பார்த்­தா­லும் உற்­சா­கம் தென்­ப­டு­கிறது. அதி­க­பட்­ச­மாக நூறு பேர் கொண்ட படக்­கு­ழுக்­கள் படப்­பி­டிப்­பில் ஈடு­ப­ட­லாம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து சின்­னத்­திரை படப்­பி­டிப்­பும் பணி­களும் தொடங்க உள்­ளன. சென்னை மட்­டும் அல்­லா­மல் காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­க­ளி­லும் வெளிப்­பு­றப் படப்­பி­டிப்பை நடத்த முடி­யும்.

கூடு­மா­ன­வரை தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட தொழி­லா­ளர்­க­ளை­யும் தொழில்­நுட்­பக் கலை­ஞர்­க­ளை­யும் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­கச் செய்­ய­வேண்­டும் என சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் அறி­வு­றுத்தி உள்­ள­னர்.

குறைந்த செல­வில் உரு­வாகி வரும் படங்­க­ளின் படப்­பி­டிப்பு அடுத்த வாரம் தொடங்­கும் என எதிர்­பார்ப்­ப­தாக தென்­னிந்­திய திரைப்­ப­டத் தொழி­லா­ளர் சம்­மே­ள­னத்­தின் பொரு­ளா­ளர் சுவா­மி­நாதன் தெரி­வித்­துள்­ளார்.

பெரும்­பா­லா­னோர் உள்­ள­ரங்­கில் காட்­சி­க­ளைப் பட­மாக்க விரும்­பு­வ­தா­க­வும் தற்­போ­தைய சூழ­லில் வெளிப்­பு­றப் படப்­பி­டிப்­பைத் தவிர்க்க விரும்­பு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்­தின் படப்­பி­டிப்பு சென்­னை­யில் உள்ள கோகு­லம் ஸ்டு­டி­யோஸ் அரங்­கில் நடக்க உள்­ளது. ஜூலை முதல் வாரம் தாம் தயா­ராக இருப்­ப­தாக விஜய் கூறி­யுள்­ளார்.

பி.எஸ். மித்­ரன் இயக்­கத்­தில் கார்த்தி நடிக்­கும் 'சர்­தார்' படப்­பிடிப்பு சென்­னை­யில் நடை­பெற உள்­ளது. இயக்­கு­ந­ரும் தயா­ரிப்­பா­ள­ரு­மான சி.வி. குமார் தனது 'மாயவன்-2' பட வேலை­களை செப்டம்­ப­ரில் துவங்க உள்­ளார்.

மேலும் 'பீட்சா-3', 'கொற்­றவை' ஆகிய படங்­க­ளுக்­கான பணி­கள் அடுத்த வாரம் திங்­கட்­கி­ழமை தொடங்க உள்­ள­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

அஜித்­தின் 'வலிமை' படத்­தின் சில காட்­சி­கள், நகைச்­சுவை நடி­கர் சதீஷ் நாய­க­னாக அறி­மு­க­மா­கும் படம், ஆகி­ய­வற்­றுக்­கான படப்­பி­டிப்­பு­களும் தொடங்க உள்­ளன.

அநே­க­மாக ஆகஸ்ட் மாதத்­தில் தமி­ழ­கத்­தில் திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­படும் என கோடம்­பாக்­கத்­தில் நம்­பிக்கை நில­வு­கிறது.

எனவே, ஊர­டங்கு தளர்­வு­களை நல்ல வாய்ப்­பா­கக் கருதி இப்­போதே அனைத்­துப் பணி­க­ளை­யும் முடித்­து­விட வேண்­டும் என பல படக்­கு­ழு­வி­னர் முழு வீச்­சில் கள­மி­றங்­குகின்றனர்.

இதற்­கி­டையே ரஜி­னி­யின் 'அண்­ணாத்த' படத்­தில் ஒரே ஒரு பாடல் காட்­சியை எடுக்­கத் திட்­ட­மிட்­டுள்­ள­னர். ரஜினி அமெ­ரிக்கா புறப்­படும் முன்பு தனக்­கு­ரிய அனைத்­துக் காட்­சி­க­ளி­லும் நடித்து முடித்­து­விட்­டார்.

இந்­நி­லை­யில் படத்­தைப் பார்­வை­யிட்ட தயா­ரிப்­பா­ளர் சன் பிக்­சர்ஸ் கலா­நிதி மாறன், குறிப்­பிட்ட ஓரி­டத்­தில் பாடல் காட்சி ஒன்று இடம்­பெற்­றால் கதை­யோட்­டம் இன்­னும் சிறப்­பாக இருக்­கும் எனக் கரு­து­வ­தா­கச் சொன்­னா­ராம். அதை ஏற்­றுக்­கொண்டு ரஜி­னி­யி­டம் விவ­ரம் கூறி­யுள்­ளார்.

'ஒரு பாடல்­தானே, எடுத்­து­வி­ட­லாம்' என்­றா­ராம் ரஜினி. இந்தப் பாடல் காட்சி அமெரிக்காவில் படமாக்கப்படவும் வாய்ப்புண்டு.