நண்பனைத் தேடும் நாயகன்

நண்பனைத் தேடும் நாயகன்

1 mins read
7076eda8-c273-4ebe-832c-0b712e684e54
'கும்பாரி' படத்தில் அபி சரவணன், மஹானா. -

அபி சர­வ­ணன், மஹானா இணைந்து நடிக்­கும் படம் 'கும்­பாரி'. ஜான் விஜய், பருத்­தி­வீ­ரன் சர­வ­ணன், மது­மிதா, சாம்ஸ், காதல் சுகு­மார் ஆகி­யோர் முக்கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கின்­ற­னர். கெவின் இயக்­கு­கி­றார்.

"நாய­க­னின் காதல் கைகூட உத­வும் நெருங்­கிய மீனவ நண்­பன் திடீ­ரென மாய­மா­கி­வி­டு­கி­றான். அவ­னுக்கு என்ன ஆனது, ஏன் தலை­ம­றை­வா­னான் என்­பது குறித்து நாய­க­னுக்­குத் தெரிய வரு­கிறது. அதன் பின்­னர் தன் நண்­பனை நாய­க­னால் மீட்க முடிந்­ததா என்­ப­து­தான் கதை," என்­கி­றார் இயக்­கு­நர் கெவின்.

கேர­ளா­வின் அடர்ந்த காட்­டுப்­பகு­தி­களில் சில முக்­கிய காட்­சி­களைப் பட­மாக்கி உள்­ள­னர்.

அவை அனைத்­துமே விறு­விறுப்­பாக இருக்­கு­மாம்.