திரைத் துளிகள்

1 mins read
4be01c55-7ff1-480c-b45b-cee6fa5ace46
-
multi-img1 of 2

உணவில் பூச்சி: நிவேதா கோபம்

அண்மையில் உணவகச் சேவைக்கான கைபேசி செயலி மூலம் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் எழுப்பியுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

அலட்சியமான செயல்பாட்டுக்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தாம் வாங்கிய உணவில் உள்ள கரப்பான் பூச்சியைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

"ஊரடங்கின்போது இப்படிப் பொறுப்பின்றிச் செயல்படக் கூடாது. மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு பூச்சியுடன் உணவு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. பலமுறை நடந்துள்ளது," என்றும் நிவேதா கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

மீண்டும் தமிழுக்கு வரும் டாப்சி

இந்தியில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் டாப்சியை மீண்டும் கோடம்பாக்கத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்திப் படங்களுக்காக கோடிக்கணக்கில் சம்பளம் பெறுபவர், தமிழில் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டுள் ளாராம். கதை பிடித்துப் போனதுதான் காரணம் என்கிறார்.

அருள்நிதி நடிப்பில் வெளியான 'கே 13' என்ற திகில் படத்தை இயக்கிய பரத் நீலகண்டன்தான் டாப்சியை தன் இயக்கத்தில் நடிக்க வைக்க உள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட படம் என்பதால், டாப்சி இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.