'இது சூர்ப்பனகை கதை'

'இது சூர்ப்பனகை கதை'

3 mins read
df1c600d-8d80-4b99-a9f0-354ffd5ff949
-

'சூர்ப்­ப­னகை' என்ற புதிய படத்­தில் நடித்­துள்­ளார் ரெஜினா கசாண்ட்ரா. திகி­லும் வர­லாற்­றுப் பின்­ன­ணி­யும் கொண்ட பட­மாக உரு­வாகி இருக்­கிறது.

ஒரு பெண்­ணின் மூர்க்­கத்­த­ன­மும் காத­லும் இணைந்­தால் என்­ன­வா­கும் என்­ப­து­தான் படத்­தின் கதைக்­க­ரு­வாம். கார்த்­திக் ராஜு இயக்­கு­கி­றார்.

கதைப்­படி ரெஜினா தொல்­பொ­ருள் ஆய்­வா­ள­ராக வரு­கி­றார். அப்­போது 100 ஆண்­டு­களுக்கு முந்­தைய எலும்­புக்­கூடு ஒன்­றைக் கண்­டெ­டுக்­கி­றார். அதன்­பி­றகு என்ன நடக்­கிறது என்­பதை விரி­வா­கக் காட்­சிப்­ப­டுத்தி உள்­ள­னர். இதில் இடம்­பெ­றும் 'கிரா­ஃபிக்ஸ்' காட்­சி­கள் பெரிய அள­வில் பேசப்­படும் என்கிறார் இயக்­கு­நர் கார்த்­திக் ராஜு.

இவ­ரது மேற்­பார்­வை­யில்­தான் 'படை­யப்பா', 'தசா­வ­தா­ரம்' உட்­பட பல படங்­க­ளின் 'கிரா­ஃபிக்ஸ்' காட்­சி­கள் உரு­வாக்­கப்­பட்­டன.

"பொது­வாக ராமன், ராவ­ணன், சீதை என்று­தான் புரா­ணப் பெ­யர்­களை மைய­மாக வைத்து திரைப்­ப­டங்­கள் உரு­வாக்­கு­வார்­கள். ஆனால் 'சூர்ப்­ப­னகை' என்று தலைப்பு வைத்­தி­ருப்­பது பல­ரை­யும் யோசிக்க வைத்­துள்­ளது. அதற்­கான கார­ணம் படம் பார்க்­கும்­போது தெரி­யும்," என்­கி­றார் கார்த்­திக் ராஜு.

"தொல்­பொ­ருள் ஆராய்ச்­சி­யா­ள­ரான ரெஜினா, புதை­கு­ழி­யாக இருந்த குறிப்­பிட்ட இடத்­தில் காவல்­து­றைக்கு உத­வும் வகை­யில் ஆய்வு மேற்­கொள்­கி­றார். அப்­போது கிடைக்­கும் நூறு ஆண்­டு­க­ளுக்கு முந்­தைய எலும்­புக்­கூடு பல கேள்­வி­களை எழுப்­பு­கிறது.

"அப்­போது முதல் திரைக்­க­தை­யில் வேகம் கூடும். இரண்­டாம் பாதி­யில் கடந்த 1920களில் நிகழ்ந்த சில சம்­ப­வங்­கள் இடம்­பெ­றும்," என்­கி­றார் கார்த்­திக் ராஜு.

முதல் பாதி நகைச்­சு­வை­யாக கடந்து செல்­லும் என்­றால், இரண்­டாம் பாதி­யில் திகி­லும் பதற்­ற­மும் அதி­கம் இருக்­கு­மாம்.

ரெஜி­னா­வு­டன் மன்­சூர் அலி­கான், ஜெயப்­பி­ர­காஷ், அக்­‌ஷரா கௌடா என பலர் நடித்­துள்­ள­னர். சாம் சி.எஸ் இசை­ய­மைக்­கும் படம் இது. கோகுல் பினாய் ஒளிப்­ப­திவை கவ­னித்­துள்­ளார். முதல் முறை­யாக இந்­தப் படத்­தில் இரட்டை வேடங்­களில் தோன்­று­கி­றார் ரெஜினா.

"கதை­யைக் கேட்ட உட­னேயே அவர் ஆச்­ச­ரி­யப்­பட்­டார். அவர் நடித்த 'எவரு' எந்த தெலுங்கு படத்­தைப் பார்த்த பிற­கு­தான் என் கதைக்கு பொருத்­த­மாக இருப்­பார் எனத் தோன்­றி­யது. அதி­லும் இரட்டை வேடங்­கள் என்­ப­தும் மேலும் உற்­சா­க­மா­கி­விட்­டார்.

"அவ­ருக்­கென்று சில சண்­டைக் காட்­சி­கள் உள்­ளன. நீண்ட தூர மிதி­வண்­டிப் பய­ணம், இமய மலைக்குச் சென்று திரும்­பு­வது என்று ஏதா­வது சாக­சத்­தில் தொடர்ந்து ஈடு­படும் பெண் என்­ப­தால் எதிர்­பார்த்­த­தை­விட சண்­டைக் காட்­சி­களில் அசத்­தி­யுள்­ளார்.

"1920களில் நடக்­கும் சில சம்­ப­வங்­களை விவ­ரிக்­கும் காட்­சி­க­ளுக்­காக சிறப்பு ஒப்­பனை போடவேண்­டி­யி­ருந்­தது. அதற்கு தின­மும் மூன்று மணி நேரம் போல் ஆகும். இருப்­பி­னும் படப்­பி­டிப்பு முடி­யும் வரை சிறி­த­ள­வும் முகம் சுளிக்­கா­மல் அர்ப்­ப­ணிப்­பு­டன் நடித்து முடித்­தார்," என்­கி­றார் இயக்கு­நர் கார்த்­திக் ராஜு.

வர­லாற்­றுப் பக்­கங்­களில் தாம் படித்­த­வற்றை நினை­வில் வைத்­தி­ருந்து இப்­ப­டத்­துக்­கான கதையை எழு­தி­யுள்­ளா­ராம்.

குறிப்­பாக, மனி­தர்­களை எவ்­வா­றெல்­லாம் முன்பு கொடு­மைப்­ப­டுத்தி உள்­ள­னர் என்­ப­து­தான் இந்­தக் கதையை எழு­து­வ­தற்­கான தூண்­டு­கோ­லாக இருந்­தது என்­கி­றார்.

"அந்த காலத்­தில் கைதி­களைக் கொடு­மைப்­ப­டுத்த 'அயர்ன் மேய்­டன்' என்ற கரு­வி­யைப் பயன்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள். ஒரு பெரிய பெட்­டி­யைப் போன்ற இயந்­தி­ரத்­தின் உள்ளே நிறைய ஆணி­களை அடித்து வைத்­தி­ருப்­பார்­களாம். தண்டனைக்­கு­ரிய ஒரு­வரை அதற்­குள் அடைத்துவி­டு­வார்­கள். பின்னர் அவர் கொடூ­ர­மாக சாக­டிக்­கப்­ப­டு­வார்.

"இந்­தச் சம்­ப­வங்­களை எல்­லாம் மன­தில் வைத்­து­தான் 'சூர்ப்­ப­னகை' கதையை எழுதி இருக்­கி­றேன்," என்று சொல்­லும் கார்த்­திக் ராஜு, ரெஜினா­வின் உழைப்­பால் படப்­பிடிப்பை குறித்த நேரத்­தில் செய்து முடிக்க இயன்­றது என்­கிறார்.

"தமிழில் பேசி நடித்த உடனேயே மீண்டும் அதே காட்சியை தெலுங்கிலும் எடுப்போம். இப்படி இடைவிடாமல் நடிப்பதற்கு பொறுமை மட்டுமல்ல, திறமை, அர்ப்பணிப்பு ஆகியவையும் தேவை. அவை ரெஜினாவிடம் உள்ளன.

"இந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும்," என்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.

ரெஜினா கசாண்ட்ரா

, :   