திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
81435d7e-b0fb-4c15-bc1d-fb8478655bd1
-
multi-img1 of 3

இந்தியில் அறிமுகமாகும் நயன்தாரா

நடிகை நயன்தாரா விரைவில் இந்தியில் அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே அவர் ஷாருக்கானுடன் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லி தமிழில் இயக்கிய முதல் படம் 'ராஜா ராணி'. இதில் நாயகியாக நடித்திருந்தார் நயன்தாரா.

இந்நிலையில் ஷாருக்கானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் அட்லி. இதில் நயன்தாராவை நடிக்க வைக்க விரும்புகிறாராம்.

இதையடுத்து பேச்சுவார்த்தை நடந்ததில் நயன்தாராவும் பச்சைக்கொடி காட்டி இருப்பதாகத் தகவல். விரைவில் அறிவிப்பு வெளியாகக்கூடும்.

தனுஷ் சம்பளம் ரூ.50 கோடி

அண்மையில் வெளியீடு கண்ட 'ஜகமே தந்திரம்' படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இந்நிலையில் 'தி கிரே மேன்' (The Grey Man) ஹாலிவூட் படத்தில் நடித்துவரும் தனுஷ், அடுத்து தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார்.

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற சேகர் கமுலா இயக்கும் படத்தில் நடிக்க தனுசுக்கு 50 கோடி ரூபாய் பேசப்பட்டிருக்கிறதாம். இந்தப் படத்தைத் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், இந்தியிலும் ஒருசேர வெளியிட இருப்பதால்தான் இந்தப் பெருந்தொகை சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது.

படத்தின் மொத்த பட்ஜெட் 120 கோடி ரூபாய் என்றும் முதன்முறையாக அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் சம்பளத்தை நெருங்கும் வகையில் தனுஷின் மதிப்பு அதிகரித்துள்ளது என்றும் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.

'பயம், உற்சாகம் இரண்டும் உள்ளது'

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தமக்குத் தெரிந்த பலர் பலியாகி விட்டதாக வருத்தப்படுகிறார் நடிகை ஜனனி.

தன்னைச் சுற்றியுள்ள அனைத்துமே மாறிவிட்டது என்றும் மனதைத் தேற்றிக்கொண்டு மீண்டும் படவேலைகளில் ஈடுபடத் தொடங்கி உள்ளதாகவும் அவர் அண்மைய சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"ஒருபக்கம் அச்சமாகவும் படவேலைகளைத் தொடங்கியதால் ஒருவித உற்சாகமும் மனதில் இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க முடியும்? எனவே, முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதும் மனதில் நம்பிக்கை ஏற்பட்டதால் வேலைகளைத் தொடங்கினேன்," என்கிறார் ஜனனி. இவர் நடித்துள்ள இரண்டு படங்களுக்குப் பின்னணி குரல் கொடுத்து வருகிறாராம். தற்போது 'யாக்கைதிரி', 'பகீரா', 'முன்னறிவான்', 'கசடதபற' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் ஜனனி.

ஆசையை நிறைவேற்றிய சேதுபதி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறை வேற்றி வைத்துள்ளார் விஜய் சேதுபதி. அந்தச் சிறுவன் தன்னைப் பார்க்க விரும்புவதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அறிந்துள்ளார். இதையடுத்து சிறுவனை அவனது குடும்பத் தாரோடு தன் வீட்டிற்கு வர வழைத்துள்ளார். பின்னர் அந்தச் சிறுவனுடன் பல விஷயங்களைப் பேசி அவனை தனக்கே உரிய பாணியில் அன்புடன் கட்டி அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு, நம்பிக்கை ஊட்டியுள்ளார் விஜய் சேதுபதி.