'எமர்ஜென்சி' படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா

'எமர்ஜென்சி' படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா

1 mins read
7d3912c0-5593-43fa-bdd3-a38eab3188e5
கங்கனா ஒப்பனை, உடல் பரிசோதனையின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள். -

ஜெய­ல­லி­தா­வின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தி­ரிக்­கும் 'தலைவி' படத்­தில் நடித்து முடித்­துள்ள கங்கனா ரணா­வத், அடுத்து காலஞ்­சென்ற முன்­னாள் பிர­த­மர் இந்­திரா காந்தி கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க உள்­ளார்.

இப்­ப­டத்­துக்கு 'எமர்­ஜென்சி' என்று தலைப்பு வைத்­துள்­ள­னர்.

புதிய கதா­பாத்­தி­ரத்­துக்­காக முழு உடல் பரி­சோ­தனை செய்து கொண்­டா­ராம் கங்­கனா.

ஒவ்­வொரு கதா­பாத்­தி­ர­மும் ஒரு புதிய பய­ணத்­தின் அழ­கிய தொடக்­கம் என்று கூறு­கி­றார் கங்­கனா.

இதுகுறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

"மறைந்த முன்­னாள் பிர­த­மர் இந்திரா காந்தி கதா­பாத்­தி­ரத்­துக்­காக உடல், முகப் பரி­சோ­தனை செய்து கொண்­டேன். இந்தப் பரிசோதனை மிக அவசியம்.

"இதி­லும் வெற்றி பெற­ வேண்­டும் என்ற கனவை நன­வாக்க பல அற்­பு­த­மான கலை­ஞர்­கள் ஒருங்­கி­ணைந்து செயல்­பட உள்­ள­னர். இது சிறப்­பு­மிக்க ஒரு பய­ண­மாக இருக்­கப் போகிறது. அந்த நம்பிக்கை எனக்கு உள்­ளது," என்­கி­றார் கங்­கனா.

'தலைவி' படத்­துக்கு தணிக்கை­யில் 'யு' சான்­றி­தழ் கிடைத்­துள்­ளது. கங்­க­னா­வைப் பொருத்­த­வரை அண்­மைக் கால­மாக தொடர்­சர்ச்­சை­களில் சிக்கி வரு­கி­றார். பல்­வேறு விஷ­யங்­கள் குறித்து இவர் தெரி­விக்­கும் கருத்­து­களுக்கு ஒரு­பக்­கம் கடும் எதிர்ப்பு, மற்­றொரு பக்­கம் ஆத­ரவு என இரண்­டும் கிளம்­பு­கின்றன.

இந்­நி­லை­யில் முன்­னாள் பிரதமர் இந்­திரா காந்தியின் வாழ்க்கையை மையப்­ப­டுத்தி இவர் நடிக்க இருக்­கும் படமும் புது சர்ச்சையை ஏற்­ப­டுத்த வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.