திரையரங்குகளில் வெளியாகிறது 'டாக்டர்'

திரையரங்குகளில் வெளியாகிறது 'டாக்டர்'

1 mins read
ac222e03-24e5-4a00-8096-db2c5b22a947
-

சிவ­கார்த்­தி­கே­யன் நடிப்­பில் உரு­வாகி உள்ள 'டாக்­டர்' (படம்)திரைப்­ப­டம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளி­யீடு காண்­கிறது.

கடந்த மார்ச் 26ஆம் தேதியே இந்­தப் படத்தை திரை­ய­ரங்­கில் வெளி­யிட இருந்­த­னர். கொரோனா நெருக்­க­டி­யால் அது சாத்­தி­ய­மா­க­வில்லை.

இத­னால் நேடி­யாக இணை­யத்­தில் வெளி­யி­டத் திட்­ட­மிட்­ட­னர். முன்­னணி நிறு­வ­னங்­க­ளு­டன் இதற்­காக நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்தை வெற்றி பெற­வில்லை. இணை­யத்­தில் வெளி­யி­டு­வ­து­டன் தொலைக்­காட்சி உரி­மை­யை­யும் சேர்த்து 'ஓடிடி' நிறு­வ­னங்­கள் படத்தை விலை­பே­சின.

ஆனால், தொலைக்­காட்சி உரிமை ஏற்­கெ­னவே சன் டிவிக்கு விற்­கப்­பட்டு விட்­டது. இத­னால் ஓடிடி நிறு­வ­னங்­கள் ஒதுங்­கிக்­கொள்ள படத்­தைத் திரை­ய­ரங்­கில் வெளி­யிட முடிவு செய்­துள்­ள­னர்.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புக்காக சிவா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.