தரமான சம்பவம்: வினோத் தகவல்

தரமான சம்பவம்: வினோத் தகவல்

1 mins read
f126e473-57fd-47e4-ba43-fdb968aa6311
'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பில் வினோத், அஜித். -

'வலிமை' படத்­தின் முதல் தோற்­றச் சுவ­ரொட்டி விரை­வில் வெளி­யி­டப்­படும் என அதன் இயக்­கு­நர் வினோத் தெரி­வித்­துள்­ளார்.

அது­வரை ரசி­கர்­கள் காத்­தி­ருக்க வேண்­டும் என­வும் அவர் கேட்­டுக்கொண்­டுள்­ளார்.

'வலிமை' படம் குறித்து உரிய தக­வல்­கள் தொடர்ச்­சி­யாக வெளி­யா­க­வில்லை என அஜித் ரசி­கர்­கள் வருத்­த­ம­டைந்­துள்­ள­னர். இந்­நி­லை­யில் 'வலிமை'யின் கொண்­டாட்­டம் மிக விரை­வில் நடை­பெ­றும் என வினோத் டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

"கோடம்­பாக்­கத்­தில் அனை­வ­ரும் இந்­தப் படத்தை ஆவ­லு­டன் எதிர்­பார்க்­கி­றார்­கள். இந்­தப் படத்­துக்கு ஆத­ரவு தரும் அனை­வ­ருக்­கும் நன்றி.

"முதல் தோற்றச் சுவ­ரொட்­டியை தயா­ரிப்­பா­ளர் போனி­க­பூர் விரை­வில் வெளி­யிடு­வார். அந்­தச் 'சம்­ப­வம்' தர­மாக இருக்­கும். கவலை வேண்­டாம்," என இயக்­கு­நர் எச்வினோத் தமது பதி­வில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.