ராஷ்மிகா: உங்கள் இடத்தில் இருந்தே அன்பு செலுத்துங்கள்

ராஷ்மிகா: உங்கள் இடத்தில் இருந்தே அன்பு செலுத்துங்கள்

1 mins read
8d48b72a-88e7-4d0f-ad1b-466613f1820c
'சுல்தான்' படத்தில் கார்த்தி, ராஷ்மிகா. -

தன்னை நேரில் சந்­திக்க வேண்­டும் என்­ப­தற்­காக ரசி­கர் ஒரு­வர் 900 கிலோ மீட்­டர் தூரம் பய­ணம் மேற்­கொண்­டதை அறிந்து நெகிழ்ந்து போயுள்­ளார் ராஷ்­மிகா.

தெலுங்­கானா மாநி­லத்­தைச் சேர்ந்த ஆகாஷ் திரி­பாதி என்ற அந்த ரசி­கர், ராஷ்­மி­கா­வின் சொந்த ஊருக்­குச் சென்று அவரை நேரில் சந்­திக்க முடிவு செய்­துள்­ளார்.

இதற்­காக 900 கிலோ மீட்­டர் பய­ணம் மேற்­கொண்ட பின்னரும், அவ­ரால் ராஷ்­மி­கா­வின் வீட்­டைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

இத­னால் அங்­குமிங்கு­மாக அலைந்து திரிந்த அவ­ரைப் பற்றி போலிசாருக்கு தக­வல் கிடைக்க, அவ­ரி­டம் விசா­ரணை நடந்­துள்­ளது. பிறகு அவ­ருக்கு அறி­வுரை கூறி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்­த­னர்.

இதற்­கி­டையே, மும்­பை­யில் படப்­பி­டிப்­பில் இருந்த நடிகை ராஷ்­மி­கா­வுக்கு இது­கு­றித்த தக­வல் தெரி­ய­வந்­தது. அவர் உட­ன­டி­யாக இது­பற்றி பதி­விட்­டார்.

"என்னை சந்­திக்க வெகு தூரம் பய­ணம் செய்­தி­ருக்­கி­றீர்­கள். உங்­களை சந்­திக்க முடி­யா­மல் போனது வருத்­த­ம­ளிக்­கிறது. இருப்­பி­னும் ஒரு நாள் உங்­களை நேரில் சந்­திப்­பேன் என நம்­பு­கி­றேன். அது­வரை உங்­கள் இடத்­தில் இருந்தே அன்பு செலுத்­தி­னால் மகிழ்­வேன். தயவு செய்து இனி இது­போல் செய்­ய­வேண்­டாம்," என்று ராஷ்­மிகா குறிப்­பிட்­டுள்­ளார்.