அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாகும் ரகுல்

அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாகும் ரகுல்

1 mins read
56aab036-7ecd-4c54-8fc6-59d0f96faf5f
-

இந்தி முன்­னணி நடி­கர் அக்­‌ஷய் குமா­ருக்கு ஜோடி­யா­கி­றார் ரகுல் பிரீத்­சிங்.

கடந்த 2018ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்­பில் வெளி­யாகி வெற்றி பெற்ற படம் 'ராட்­ச­சன்'. ராம்­கு­மார் இயக்­கிய இப்­ப­டத்­தில் அம­லா­பால் நாய­கி­யாக நடித்­தி­ருந்­தார். தற்­போது இப்­ப­டத்தை இந்­தி­யில் மறு­ப­திப்பு செய்ய உள்­ள­னர்.

நாய­க­னாக நடிப்­ப­து­டன் இப்­ப­டத்­தைத் தயா­ரிக்­க­வும் செய்­கி­றார் அக்­‌ஷய் குமார். இந்­நி­லை­யில் இதில் ரகுல் ப்ரீத்­சிங்கை நாய­கி­யாக ஒப்­பந்­தம் செய்­துள்­ள­தா­கத் தக­வல்.

இடை­யில் போதை மருந்து விவ­கா­ரம் தொடர்­பில் விசா­ர­ணைக்கு உள்­ளா­னார் ரகுல் பிரீத்­சிங். இத­னால் கடும் மன வருத்­தத்­தில் இருந்­த­வ­ருக்கு நல்ல வாய்ப்­பு­கள் கிடைத்து வரு­கின்­றன.

அக்‌ஷய் குமாருடன் நடிப்பதால் இவரது மதிப்பு அதிகரித்துள்ளது. விரைவில் தன் சம்பளத்தையும் உயர்த்த உள்ளாராம்.