அதர்வா நடிப்பில் உருவாகி வருகிறது 'குருதியாட்டம்'. இதில் அவரது ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார்.
'8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகிறது இப்படம்.
ராதாரவி, ராதிகா சரத்குமார் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் 'ரங்கராட்டினம்' என்ற பாடலை இன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மிக விரைவில் மேலும் ஒரு பாடல் வெளியீடு குறிது அறிவிக்கப்படுமாம்.
இதற்கிடையே மலையாளத்தில் வெற்றி பெற்ற 'அஞ்சாம் பாத்திரா' படத்தின் தமிழ் மறுபதிப்பில் அதர்வா நடிக்க உள்ளார்.
கடந்த ஆண்டு மிதுன் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் இது. மறுபதிப்பு குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது.

