ஸ்ரீபிரியங்கா: நன்மை விளைந்ததில் மகிழ்ச்சி

3 mins read
9e23e3aa-9a4e-45af-81be-52ee67e08f9c
-

ஆண்­டுக்கு ஒரு படத்­தில் நடித்­தா­லும் பர­வா­யில்லை, அது தர­மான படைப்­பாக இருக்க வேண்­டும் என விரும்­பு­வ­தா­கச் சொல்­கிறார் ஸ்ரீ பிரி­யங்கா.

'கங்­காரு', 'ஸ்கெட்ச்' உள்­ளிட்ட படங்­களில் நடித்­துள்ள இவர், தற்­போது இரண்டு புதுப் படங்­களில் ஒப்­பந்­த­மாகியுள்­ளார்.

ஸ்ரீ பிரி­யங்கா நடித்த 'மிக மிக அவ­ச­ரம்' படத்­தால் ஒரு நன்மை விளைந்­துள்­ளது. தமி­ழ­கத்­தில் இனி பெண் காவ­லர்­கள் சாலை பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட மாட்­டார்­கள் என்­பதே அது. இது குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு அண்­மை­யில் வெளி­யா­னது.

கொரோனா பாதிப்­பு­கள் குறித்து கேள்­விப்­பட்டு மனம் நொந்து போயி­ருந்த வேளை­யில், இந்த அறி­விப்பு தமக்கு ஆறு­தல் அளித்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார் ஸ்ரீ பிரி­யங்கா.

தமி­ழ­கத்­தில் முதல்­வர், மத்­திய அமைச்­சர்­கள் உள்­ளிட்­டோர் செல்­லும் இடங்­களில் சாலைப்­பாது­காப்பு பணி­களில் பெண் காவ­லர்­கள் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வது வழக்­கம். இது அவர்­க­ளுக்கு பல்­வேறு சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக தொடர்ந்து கூறப்­பட்டு வந்­தது.

சில சம­யங்­களில் குடிக்க தண்­ணீர்­கூட கிடைக்­காது. இயற்கை உபா­தை­க­ளின்­போ­தும் கூட பெரும் சங்­க­டங்­களை எதிர்­கொள்­வார்­கள். அப்­ப­டிப்­பட்ட ஒரு பெண் காவ­ல­ரின் அவ­தி­களை விவ­ரிக்­கும் வகை­யில் 'மிக மிக அவ­ச­ரம்' படத்தை உரு­வாக்கி இருந்­தார் இயக்­கு­நர் சுரேஷ் காமாட்சி. இவர் தற்­போது சிம்பு நடிக்­கும் 'மாநாடு' படத்தை தயா­ரிக்­கி­றார்.

"லாப நோக்­கம் ஏது­மின்றி அவர் இயக்­கிய இந்­தப் படம் ஈர மனம் உள்ள, பெண்­கள் மீது மரி­யாதை கொண்ட எவ­ரை­யும் நிச்­ச­யம் பாதிக்­கும்," என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்­ளி­கள்.

கதைப்­படி, இப்படத்­தில் சாமந்தி என்ற பெண் காவ­ல­ராக நடித்­தி­ருந்­தார் பிரி­யங்கா. தமக்கு இப்­ப­டி­யொரு வாய்ப்பை அளித்த இயக்­கு­ந­ருக்கு நன்றி தெரி­விப்­ப­தாக நெகிழ்­கி­றார்.

தற்­போது புது­வை­யில் வசிக்­கும் ஸ்ரீ பிரி­யங்கா­வுக்கு அங்­குள்ள திருக்­க­னூர்­தான் சொந்த ஊராம். தந்தை குண­சே­க­ரன் அங்கு பழ­ர­சக் கடை வைத்­துள்­ளார். தாய் பூங்­கொடி, மூத்த சகோ­த­ரர் குமார், ஸ்ரீ பிரி­யங்கா என சிறிய குடும்­பம்.

"இந்­தக் கதா­பாத்­தி­ரத்தை சவா­லாக ஏற்று நடித்­தேன். உண்­மை­யில் நான் எனது கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­காக எந்­தப் பயிற்­சி­யும் மேற்­கொள்­வ­தில்லை. அப்­ப­டிச் செய்­தால் செயற்­கைத்­த­ன­மாக இருக்­கும் என்­பது என் கருத்து.

"பெண் காவ­லர்­க­ளுக்கு ஏதா­வது நன்மை விளைய வேண்­டும் என்று படப்­பி­டிப்­பின்­போது தோன்­றி­யது. அந்த வகை­யில் தமி­ழக அர­சின் அறி­விப்­பால் மொத்த படக்­கு­ழு­வும் மகிழ்ச்­சி­யில் உள்­ளோம்.

"நான் நடி­கை­யா­கா­மல் ஒரு பெண் காவ­லர் சாமந்­தி­யாக இருந்­தி­ருந்­தால் என்­ன­வெல்­லாம் செய்­தி­ருப்­பேனோ அப்­ப­டித்­தான் திரை­யில் என்னை வெளிப்­ப­டுத்­தி­னேன். இதற்­காக எந்த நடி­கை­யை­யும் நான் பின்­பற்­ற­வில்லை. எனக்­குத் தோன்­றிய வகை­யில் நடித்­தேன். என் மீது நம்­பிக்கை வைத்த இயக்­கு­ந­ருக்கு நன்றி சொல்ல வேண்­டும்.

"மாற்­றம் வர­வேண்­டும் என்று நினைத்து உழைத்­தோம். அது வந்­துள்­ளது," என்­கி­றார் ஸ்ரீ பிரி­யங்கா.

நார்வே திரைப்­பட விழா­வில் இவ­ருக்­குச் சிறந்த நடி­கைக்­கான விருது அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இதை இப்­ப­டத்­துக்­கான மற்­றொரு அங்­கீ­கா­ர­மா­கக் கரு­து­கி­றா­ராம்.

"இந்த ஆண்டு அந்த விருது என் கைக்கு வரும் என நம்­பு­கி­றேன். உண்­மை­யைப் பிர­தி­ப­லிக்­கும் இப்­ப­டிப்­பட்ட படங்­களில் நடிக்க முன்­னு­ரிமை அளிப்­பேன்," என்­கி­றார் ஸ்ரீ பிரியங்கா.

, :   

ஸ்ரீ பிரியங்கா