விஜய்யுடன் இணைந்த ஜானி

1 mins read
2e5a579e-387d-493a-8e2d-f5882ecc97c9
-

விஜய்யின் 65வது படம் 'பீஸ்ட்'. இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதன்பிறகு ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்பொழுது தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் படப்பிடிப்புத் தளத்தில் விஜய்யும் பூஜா ஹெக்டேவும் பங்கேற்று வரும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பாடல் காட்சிக்கு 'புட்டபொம்மா' என்கிற புகழ்பெற்ற தெலுங்குப் பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குநர் ஜானி நடனம் அமைக்கிறார்.

'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் 'புட்டபொம்மா' என்ற பாடலுக்கு அல்லு அர்ஜுனும் பூஜா ஹெக்டேயும் நடனம் ஆடியிருந்தனர். அல்லு அர்ஜூன் காற்றில் மிதப்பதுபோலவே நடனம் ஆடியிருப்பார். அதுபோல தன்னுடைய படத்திற்கும் ஜானி நடனம் அமைக்கவேண்டும் என்ற ஆவலில் விஜய் அவரைப் 'பீஸ்ட்' படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார். படப்பிடிப்பின்போது ஜானிக்குப் பிறந்தநாள் என்பதை அறிந்த விஜய் படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடியுள்ளார். அப்போது ஜானியை அணைத்தபடி விஜய் வாழ்த்து தெரிவித்த புகைப்படத்தை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது.