கோடம்பாக்கத்துப் பாணியில் புது மாற்றம்

கோடம்பாக்கத்துப் பாணியில் புது மாற்றம்

2 mins read
d10f4f67-2ba2-4f60-9496-389700f14096
-

கோடம்­பாக்­கத்­தில் வெகு விரை­வில் பணி­கள் தொடங்­கு­வ­தற்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டத் துவங்­கி­யுள்­ளன.

இந்­நி­லை­யில் 'ஓடிடி' தளங்­க­ளின் வளர்ச்­சி­யால் திரைப்­ப­டங்­க­ளைத் தயா­ரிக்­கும் பாணி­யில் சில மாற்­றங்­கள் ஏற்­பட்­டுள்­ள­தாக கோடம்­பாக்­கத்து விவ­ரப்­புள்­ளி­கள் சொல்­கி­றார்­கள்.

தற்­போது கதா­நா­ய­கி­களை முன்­னி­லைப்­ப­டுத்தி தயா­ரிக்­கப்­படும் படங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. இத­னால் 'மார்க்­கெட்' இழந்த நடி­கை­களுக்­கும்­கூட வாய்ப்­பு­கள் தேடி வரு­கின்­றன.

இன்­னொரு பக்­கம் ஜோதிகா, நயன்­தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகி­யோரை இணை­யத் தொடர்­களில் நடிக்க வைப்­ப­தற்­கான முயற்­சி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் முன்­னணி நடி­கர்­களை வைத்­துப் பட­மெ­டுக்­கும்­போது கோடிக்­க­ணக்­கில் சம்­ப­ளம் கொடுப்­பது, பிர­ம்மாண்ட அள­வில் செலவு செய்­வது ஆகி­ய­வற்­றால் பல தயா­ரிப்­பா­ளர்­கள் கயிறு மேல் நடப்­ப­தாக உணர்­கி­றார்­க­ளாம்.

படத்தை வெற்­றி­க­ர­மாக எடுத்து முடித்­தா­லும் அதன் வியா­பா­ரத்­துக்­காக இன்­னும் அதி­க­மாக மெனக்­கெட வேண்டி உள்­ளது.

திரை­யு­ல­கம் சார்ந்த பணப்­பஞ்­சா­யத்­து­கள், கொரோனா போன்ற எதிர்­பாராத தடை­கள் ஆகி­ய­வற்­றை­யும் சமா­ளிக்க வேண்டி உள்­ளது. திரை­ய­ரங்­கு­க­ளைப் பிடிப்­பது மற்­றொரு போராட்­டம்.

இதை­யெல்­லாம் கணக்­குப் போட்­டுப் பார்க்­கும் தயா­ரிப்­பா­ளர்­கள், கதா­நா­ய­கி­களை முன்­னி­லைப்­ப­டுத்­தும் கதை­க­ளாகத் தேர்வு செய்து இந்­நாள், முன்­னாள் கதா­நா­ய­கி­களை ஒப்­பந்­தம் செய்து, குறைந்த செல­வில் படத்தை தயா­ரிக்க விரும்­பு­கி­றார்­க­ளாம். ரசி­கர்­க­ளி­டம் பெயர் வாங்க முடி­யும் என்­ப­தால் பெரும்­பா­லான கதா­நா­யகி­கள் குறை­வான சம்­ப­ளத்­துக்கு ஒப்புக்­கொள்­கி­றார்­கள்.

"இத்­த­கைய படங்­களை முன்­னணி 'ஓடிடி' நிறு­வ­னங்­களும் ஆர்­வத்­து­டன் வாங்கி வெளி­யி­டு­கின்­றன. இந்த நிறு­வ­னங்­க­ளின் எதிர்­பார்ப்­பு­களை தயா­ரிப்­பா­ளர்­க­ளால் எளி­தில் நிறை­வேற்ற முடி­கிறது. மேலும் வியா­பார உத்­த­ர­வா­த­மும் இருப்­ப­தா­கக் கரு­து­கி­றார்­கள். அந்த வகை­யில் சில முன்­னணி நாய­கி­கள் நடிப்­பில் உரு­வாகி வெளி­யீடு காணத் தயா­ராக உள்ள சில திரைப்­ப­டங்­கள் 'ஓடிடி'யில் அடுத்­த­டுத்து வெளி­யாக உள்­ளன," என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவரப் புள்­ளி­கள்.

இத­னால் தற்­போது கோடம்­பாக்­கத்­தில் நாய­கி­களை முன்­னி­லைப்­படுத்­தும் படங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. 'நெற்­றிக்­கண்' படத்­தில் நயன்­தாரா கண்­பார்வை அற்­ற­வ­ராக நடிக்­கி­றார். இதில் நாய­கன் என்று யாரு­மில்லை. படப்­பி­டிப்பு முடிந்த நிலை­யில் விரை­வில் திரை காண்­கிறது.

திரிஷா நடிக்­கும் 'கர்­ஜனை', 'ராங்கி' ஆகிய படங்­கள் முன்­னணி 'ஓடிடி' நிறு­வ­னத்­தில் வெளி­யாக வாய்ப்­புள்­ள­தாம். ஐஸ்­வர்யா ராஜேஷ் நடித்­து­வ­ரும் 'பூமிகா', ரெஜினா நடிக்­கும் 'சூர்ப்­பனகை', காஜல் அகர்­வா­லின் 'பாரிஸ் பாரிஸ்' ஆகி­ய­வை­யும் கதா­நா­ய­கியை முன்­னி­லைப்­ப­டுத்­தும் படங்­கள்­தான்.

இதற்­கி­டையே பல கதா­நா­ய­கி­கள், நாய­கர்­கள் தேவைப்­ப­டாத படங்­களில் நடிப்­ப­தால் மற்­றொரு சிக்­கல் எழுந்­துள்­ளது. இளம் நாய­கி­களும் மற்ற கதா­நா­ய­கி­களும் முன்­னணி நடி­கர்­களு­டன் இணை­யும்­போது சம்­ப­ளத்­தைக் குறைத்­துக்கொள்­ளும்­படி தயா­ரிப்­புத் தரப்பு நச்­ச­ரிக்­கி­ற­தாம்.

"இணை­யத் தொடர்­க­ளி­லும் தனி நாயகி உள்ள படங்­க­ளி­லும் நடிக்­கும் நடி­கை­க­ளால் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்­குப் பெரிய லாபம் கிடைக்­கிறது. ஆனால் அவர்­கள் உங்­க­ளை­விட குறை­வான சம்­ப­ளம்­தான் வாங்­கு­கி­றார்­கள்," என்று தயா­ரிப்­பா­ளர்­கள் சுட்­டிக்­காட்­டு­கிறார்­களாம்.

கீர்த்தி சுரேஷ்

, :   