டாப்சி: பாகுபாடு காட்டாதீர்

3 mins read
9944bb6f-3f9b-48ee-8bee-443e75171691
-

நடி­கை­கள் அதிக சம்­ப­ளம் கேட்­டால் மட்­டும் அதை சர்ச்­சை­யாக்­கு­கி­றார்­கள் என்­கி­றார் டாப்சி.

இது தமக்கு வருத்­த­ம­ளிப்­ப­தா­க­வும் நடி­கை­களும் திற­மை­சா­லி­கள் என்­பதை ஒப்­புக்­கொள்ள வேண்­டும் என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­தி­யில் முன்­னணி நடி­கை­யாக இருக்­கும் டாப்சி, அண்­மை­யில் நடித்த படங்­கள் அனைத்­துமே விமர்­சன, வசூல் ரீதி­யில் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளன. இதை­யடுத்து அவர் தனது சம்­ப­ளத்தை உயர்த்தி இருப்­ப­தா­கத் தக­வல் வெளி­யா­னது. கொரோனா நெருக்­கடி வேளை­யில் அவ­ரது இந்­தச் செயல்­பாடு ஏற்க முடி­யா­தது என சமூக வலைத்­த­ளங்­களில் சிலர் பதி­விட்­டுள்­ள­னர். இத­னால் தாம் வருத்­த­மும் கோப­மும் அடைந்­த­தாக சொல்­கி­றார் டாப்சி.

"திரை­யு­ல­கில் நடி­கர், நடி­கை­கள் இடையே நிறைய பாகு­பாடு நிலவு­கிறது. ஒரு நடிகை தன் உழைப்­புக்­கேற்ற சம்­ப­ளத்­தைக் கேட்­டால் உடனே விமர்­ச­னத்­துக்கு ஆளா­கி­றார். அவர் சர்ச்­சைக்­கு­ரி­ய­வ­ராக, சிக்­கல் நிறைந்­த­வ­ராக சித்­தி­ரிக்­கப்­படு­கி­றார்.

"ஆனால், ஒரு நடி­கர் தன் சம்­ப­ளத்தை உயர்த்­தும்­போது யாரும் வாய் திறப்­ப­தில்லை. கார­ணம், நடி­கர்­கள் தங்­கள் படத்­தின் வெற்­றியை உறுதி செய்­யும் வகை­யில் சம்­ப­ளத்தை உயர்த்­து­வ­தா­கக் கரு­து­கி­றார்­கள். மேலும் சம்­பள உயர்வு என்­பது இந்த வெற்­றிக்­கான அங்­கீ­கா­ரம் என்­றும் சித்­தி­ரிக்­கப்­ப­டு­கிறது. என்­னு­டன் ஒரே கால­கட்­டத்­தில் நடிக்க வந்த நடி­கர்­கள் இப்­போது என்­னை­விட அதி­கம் சம்­பா­திக்­கின்­ற­னர்," என்­கி­றார் டாப்சி.

தம்மை சர்ச்­சைக்­கு­ரிய நடிகை என்று சொல்­வது குறித்து தாம் கவ­லைப்­ப­டு­வ­தில்லை என்று குறிப்­பிட்­டுள்ள அவர், சமூ­கம் சார்ந்த விஷ­யங்­கள் குறித்து கருத்து சொல்­ல­வும் தாம் தயங்­கி­யதே இல்லை என்­கி­றார்.

டாப்­சிக்கு இந்­தி­யில் நிறைய வாய்ப்­பு­கள் தேடி வரு­கின்­றன. அதே­ச­ம­யம் பிற மொழிப் படங்­க­ளி­லும் நடிக்க விரும்­பு­கி­றா­ராம்.

இந்­தி­யில் இந்­தி­யக் கிரிக்­கெட் வீராங்­கனை மித்தாலி ராஜ் வாழ்க்­கையை மைய­மாக வைத்து உரு­வா­கும் 'சபாஷ் மித்து', தமி­ழில் ஜெயம் ரவி­யு­டன் 'ஜன கன மன' படத்­தில் நடிப்­ப­வர், தெலுங்­கில் உரு­வா­கும் 'மிஷன் இம்­பா­சி­பிள்' படத்­தி­லும் ஒப்­பந்­த­மாகி உள்­ளார். பிற­மொ­ழி­களில் இவர் நடிக்­கும் படங்­கள் அனைத்­துமே இந்­தி­யில் மொழி­மாற்­றம் செய்­யப்­ப­டு­கின்­றன.

பர­ப­ரப்­பான திரை­வாழ்க்­கைக்கு மத்­தி­யில் தாம் திரு­ம­ணம் குறித்­தெல்­லாம் ஏதும் யோசிக்­க­வில்லை என்று சொல்­ப­வர், திரு­ம­ணம் குறித்து எந்­த­வி­த­மான எதிர்­பார்ப்­பு­களும் இப்­போ­தைக்கு இல்லை என்­கி­றார். அதே­ச­ம­யம் தன் பெற்­றோர் விரும்­பாத ஒரு­வ­ரைத் திரு­ம­ணம் செய்ய வாய்ப்­பில்லை என்­றும் சொல்­கி­றார்.

"எத்­த­கைய ஒரு­வ­ரு­டன் நட்பு அல்­லது உறவு பாராட்­டி­னா­லும் அது எதிர்­கா­லத்­தி­லும் நீடிக்க வேண்­டும் என விரும்­பு­வேன். இல்­லை­யெ­னில் ஒரு­வ­ரு­டன் நேரத்தை செல­வி­டு­வது வீண் வேலை என்று நினைப்­பேன்.

"பொழு­து­போக்­குக்­காக ஒரு­வ­ரி­டம் பழ­கு­வது எனக்­குப் பிடிக்­காத ஒன்று. நான் திரு­ம­ணம் செய்­ப­வரை என் பெற்­றோ­ருக்­கும் பிடிக்க வேண்­டும். என் பெற்­றோ­ரை­யும் மதித்து ஏற்­கும் ஒரு­வ­ரை­த்தான் நான் வாழ்க்­கைத் துணை­யாக அடை­வேன்," என்று சொல்­லும் டாப்சி, அண்­மைக் கால­மாக திரு­ம­ணம் செய்­து­கொள்­ளு­மாறு பெற்­றோர் தம்மை வற்­பு­றுத்­து­வ­தை­யும் ஒப்­புக் கொள்­கி­றார். எங்கே கடை­சி­வரை தங்­கள் மகள் திரு­ம­ணம் செய்­து­கொள்­ளா­ம­லேயே இருந்து விடு­வாளோ என்று அவர்­க­ளுக்­குப் பயம் இருப்­ப­தாகச் சொல்­கி­றார்.

"தற்­போது நிறைய பட வாய்ப்­பு­கள் தேடி­வ­ரு­கின்­றன. நடிப்­புத் துறை­யில் சில மைல் கற்­களை எட்­டிப்­பி­டிக்க வேண்­டும் என இலக்கு வைத்­துள்­ளேன். அவற்றை அடைந்­த­தும் எனது சினிமா பய­ணத்­தின் வேகம் குறை­யக்­கூ­டும். இப்­போது ஆண்­டுக்கு 6, 7 படங்­களில் நடிக்க விரும்­பு­கி­றேன் எனில் எதிர்­கா­லத்­தில் அந்த எண்­ணிக்கை இரண்டு அல்­லது மூன்­றா­கக் குறை­யக்­கூ­டும். அப்­போ­து­தான் திரு­ம­ணம் குறித்து யோசிப்­பேன்," என்று தெளி­வா­கப் பேசு­கி­றார் டாப்சி.

கொரோனா இரண்­டா­வது அலை இவரை மன­த­ள­வில் வெகு­வாகப் பாதித்துவிட்­ட­தாம். இவர் நடித்து வெற்றிபெற்ற 'ராஷ்மி ராக்­கெட்' படத்­தின் இயக்­கு­நர், நெருங்­கிய தோழி­யின் பாட்டி தாத்தா உள்­ளிட்ட பலரை இழந்­து­விட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"அதில் இருந்து மீண்டுவர முயற்சி செய்து வருகிறேன். எல்லோரும் கவனமாக இருங்கள் என்று மட்டுமே சொல்லமுடிகிறது," என்கிறார் டாப்சி.

, :   

டாப்சி