சமூக வலைத்தளங்களில் தங்களை லட்சக்
கணக்கானவர்கள் பின்தொடர்வதைப் பெருமையாகவும் தங்களது மார்க்கெட் மதிப்பை வெளிப்படுத்தும் ஓர் அம்சமாகவும் நடிகைகள் கருதுவதாக கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.
அந்த வகையில் சமூக வலைத்
தளங்களில் முன்னணியில் உள்ள நடிகைகளைப் பார்ப்போம்.
கீர்த்தி சுரேஷ், ராஷி கன்னா, தமன்னா, சமந்தா, டாப்சி என கோடம்பாக்கத்தில் முன்னணியில் உள்ள பல நடிகைகள் இன்ஸ்டகிராமில் வலம் வருகின்றனர்.
இவர்களில் முதல் பத்து இடங்
களுக்குள் கடைசியாக இடம்பெற்றிருப்பவர் ராஷி கன்னா. 'மெட்ராஸ் கஃபே' இந்திப் படம் மூலம் திரைஉலகில் அறிமுகமான இவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாவில் கணக்குத் தொடங்கினார். அதன் பின்னர் மெல்ல மெல்ல அதிகரித்த ரசிகர்
களின் எண்ணிக்கை ஏழு மில்லியனைத் தொட்டிருக்கிறது.
இவருக்கு ஓராண்டுக்கு முன்பாக 2015ல் கணக்கு தொடங்கிய கீர்த்தி சுரேஷை 9.5 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். 'ரஜினி முருகன்' படம் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி, தற்போது ரஜினியுடன் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார்.
தமன்னாவுக்கு வாய்ப்புகள் குறைந்தாலும் ரசிகர் கூட்டம் குறையவில்லை. ஒன்பதாம் இடத்தில் உள்ள கீர்த்தியை மிஞ்சி எட்டாம் இடத்தில் உள்ள இவரை 13.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
2014ல் இன்ஸ்டகிராமில் நுழைந்த தமன்னா, அவ்வப்போது சில உருப்படியான கருத்துகளை பதிவிடுகிறார்.
விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவை இன்ஸ்டாவில் கண்டு ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 14.2 மில்லியன்.
'முகமூடி' படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், இந்தியில் வெளியான 'மொகஞ்சதாரோ' படம் மூலம் உச்சிக்கு சென்றார்.
படப்பிடிப்புக்காக வெளிநாடுகள் சென்றாலும்கூட தமது பதிவுகள் மூலம் ரசிகர்களிடம் தொடர்பில் இருப்பாராம் பூஜா.
நேரமில்லாவிட்டால் புகைப்
படங்களையேனும் பதிவிடுவது இவரது வழக்கம். இவருக்கு ஏழாம் இடம் கிடைத்துள்ளது. இப்
பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ள ஷ்ருதிஹாசனை 16.9 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
பூஜாவைப்போல் இவரும் 2013ஆம்
ஆண்டுதான் இன்ஸ்டகிராம் பகுதியில் கணக்குத் தொடங்கினார். எனினும் பிரபல நடிகரின் மகள் என்பதாலோ இசை உலகிலும் வலம் வருபவர் என்பதாலோ தெரியவில்லை, எண்ணிக்கை அளவில் பூஜாவை மிஞ்சிவிட்டார்.
இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக இன்ஸ்டகிராமில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகைகளின் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார் ரகுல் பிரீத்சிங். இவரும் 2013ஆம் ஆண்டுதான் இத்தளம் மூலம் ரசிகர்களைச் சந்திக்கத் துவங்கினார்.
கன்னடத்தில் வெளியான 'கில்லி'தான் இவரது முதல் படம். ரகுல் நடிப்பில் தெலுங்கில் வெளியீடு கண்ட 'கிக்-2' படம் பெரிய அளவில் பெற்ற வெற்றிதான் அவரை சமூக வலைத்தளங்களிலும் பிரபலமடைய வைத்தது. குறுகிய காலத்திலேயே ஏராளமானவர்கள் இவரை இன்ஸ்டகிராமில் பின்தொடரத் தொடங்கினர். அந்த எண்ணிக்கை இப்போது 17.2 மில்லியனாக கூடியுள்ளது.
'விண்ணைத் தாண்டி வருவாயா' மறுபதிப்பின் மூலம் தெலுங்கில் அறிமுகமான சமந்தாவுக்கு தமிழில் பெயர் வாங்கிக் கொடுத்த படம் 'நீதானே என் பொன் வசந்தம்'. 2016ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன் பின்னர் ரசிகர்கள் இவரது பதிவுகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினர். தற்போது 17.3 மில்லியன் ரசிகர்களுடன் 4ஆம் இடத்தைப்
பிடித்துள்ளார் சமந்தா.
மூன்றாம் இடத்தில் உள்ள 'சுல்தான்' பட நாயகி ராஷ்மிகா மந்தனாவை 18.5 மில்லியன் ரசிகர்கள் ஆர்வத்தோடும் கிறக்கத்தோடும் கவனித்து வருகிறார்கள். 2014ஆம் ஆண்டிலேயே இவர் இன்ஸ்டகிராமில் நுழைந்து விட்டார். சீரான இடைவெளிகளில் இவர் வெளியிடும் புகைப்படங்களும் பதிவுகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.
பொதுவான கருத்துகளைப் பதிவு செய்வதுடன் ரசிகர்களின் நலன் குறித்தும்
அக்கறையுடன் விசாரிப்பது, நல்ல அறிவுரைகளை வழங்குவது என்று பொறுப்பாக செயல்
படுவதால் ராஷ்மிகாவுக்கு தொடர் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
இந்தப் பட்டியலில் இரண்டாம் இடப் பிடித்துள்ளவர் டாப்சி. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்துபவர், இந்தியில் முன்னணி நாயகியாகத் திகழ்
கிறார். இவரை இன்ஸ்டகிராமில் பின்
தொடர்பவர்களின் எண்ணிக்கை 18.3
மில்லியன்.
காஜல் அகர்வால்தான் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் என்ற தகவல் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் காஜலை, அவர் இன்ஸ்டாவில் கணக்குத் தொடங்கியது முதல் 19 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

