முதன்முறையாக சிம்புவின் சம்பளம் பத்து கோடியைக் கடந்துள்ளது. கௌதம் மேனன் இயக்கும் படத்துக்காக இந்தப் பெரும் தொகையைப் பெற உள்ளார் சிம்பு. அவரும் கௌதமும் மூன்றாவது முறையாக இணைகின்றனர்.
படத்துக்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தக் கூட்டணியுடன் ஏ.ஆர்.ரகுமானும் மூன்றாவது முறை இணைகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக சில ஆச்சரியங்கள் நிகழ்ந்துள்ளன.
கௌதம் மேனனைப் பொருத்தவரை படப்பிடிப்பு நடக்கும்போதுதான் முழுக் கதையையும் எழுதி முடிப்பார். அதற்கு முன்பு அவருக்கே முழுக் கதையும் தெரியாது எனும் விமர்சனம் இப்போது உடைபட்டுள்ளது.
இம்முறை முழுக் கதையையும் திரைக்கதை வசனங்களோடு முழுமையாக எழுதி முடித்து அதைப் புத்தகமாக சிம்புவிடமும் தயாரிப்பாளரிடமும் கொடுத்து விட்டாராம். வழக்கம்போல் காதலும் அடிதடியும் உள்ள படமாக உருவாகிறது 'நதிகளிலே நீராடும் சூரியன்'.
இப்படத்துக்காக இரண்டு மாதங்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சிம்பு. அவருக்கு பத்து கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்.

