சேதுபதி: சர்ச்சைக்குரிய இணையத் தொடரில் நடிக்கவில்லை

சேதுபதி: சர்ச்சைக்குரிய இணையத் தொடரில் நடிக்கவில்லை

1 mins read
70fcfe3f-4c17-4196-a56d-4dad180fa3b0
'தி ஃபேமிலி மேன்-2' இணையத் தொடரின் சுவரொட்டியில் சமந்தா, மனோஜ் பாஜ்பாய். -

'தி ஃபேமிலி மேன்' தொட­ரின் மூன்­றாம் பகு­தி­யில் தாம் நடிக்­க­வில்லை என்­பதை விஜய் சேது­பதி நாசுக்­காகத் தெரி­வித்­துள்­ளார்.

அந்த இணை­யத் தொடர் ஈழத்­த­மி­ழர்­க­ளை­யும் அவர்­க­ளின் தியா­கத்­தை­யும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தாக எதிர்ப்பு கிளம்­பி­யது.

இந்த இணை­யத் தொடரை தடை செய்­ய­வேண்­டும் என்­றும் கோரிக்­கை­கள் எழுந்­தன.

இந்­நி­லை­யில் 'தி ஃபேமிலி­மேன்' மூன்­றாம் பாகம் உரு­வா­கிறது என்­றும் அதில் விஜய் சேது­பதி முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க இருப்­ப­தா­க­வும் ஒரு தக­வல் வெளி­யா­னது. இத­னால் தமிழ் ரசி­கர்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர்.

ஏற்­கெ­னவே இலங்கை கிரிக்­கெட் வீரர் முத்­தையா முர­ளி­த­ர­னின் வாழ்க்கை வர­லாற்­றுப் படத்­தில் இருந்து வில­கி­னார் சேதுபதி.

இந்­நி­லை­யில் 'தி ஃபேமிலி மேன்' மூன்­றாம் பாகத்­தில் நடிக்­க­வில்லை என அவர் நாசூக்­காகத் தெரி­வித்­துள்­ளார்.

"நான் இந்தி நடி­கர் ஷாகித் கபூ­ரு­டன் இணைந்து இணை­யத்­தொ­டர் ஒன்­றில் நடிக்­கி­றேன். ஆனால் மனோஜ் பாஜ்­பா­யு­டன் இணைந்து எந்­தத் தொட­ரி­லும் நடிக்­க­வில்லை. எனி­னும் அவருடன் இணைந்து நடிக்­கும் ஆர்­வம் உள்­ளது," என்று சேது­பதி தெரி­வித்­துள்­ளார்.

'தி ஃபேமிலி மேன்' தொட­ரில் மனோஜ் பாஜ்­பாய் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருந்­தார் என்­பது கவ­னிக்­கத்­தக்­கது. அவ­ரு­டன் இணைந்து நடிக்­க­வில்லை என்று தெரி­வித்­த­தன் மூலம் சர்ச்­சைக்­கு­ரிய தொட­ரில் தாம் நடிக்­க­வில்லை என்­ப­தை­யும் உணர்த்­தி­யுள்­ளார் விஜய்­சே­து­பதி.