தனுஷ் படத்தின் புதுத் தலைப்பு 'ராயன்'

தனுஷ் படத்தின் புதுத் தலைப்பு 'ராயன்'

2 mins read
86d9e526-be16-421d-ae4b-9391f35b2a1d
'ஜகமே தந்திரம்' படத்தில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி. -

லாபம், நஷ்­டம், சுமார் வெற்­றிப்­படைப்பு என தாம் நடிக்­கும் படங்­கள் தொடர்­பில் கல­வை­யான விமர்­ச­னங்­க­ளைப் பெற்று வரு­கிறார் தனுஷ். எனி­னும் அவ­ரது வேகம் குறைந்­த­தா­கத் தெரி­ய­வில்லை.

வெற்றி, தோல்வி பற்றி கவலைப் ப­டா­மல் திற­மை­சா­லி­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­கி­றார். படத்­துக்­குப் படம் ஏதா­வது வித்­தி­யா­சம் காட்ட வேண்­டும் என்ற அவ­ரது தாக­மும் செயல்­பா­டு­க­ளும்­தான் அவ­ரு­டன் இணைந்து பணி­யாற்றத் தூண்­டு­கிறது என்­கி­றார்­கள் கோடம்­பாக்­க விவ­ரப் புள்­ளி­கள்.

அந்த வகை­யில் சுமார் பத்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு தமது மூத்த சகோ­த­ரர் செல்­வ­ரா­க­வன் இயக்­கத்­தி்ல் நடிக்க உள்­ளார் தனுஷ். கலைப்­புலி தாணு தயா­ரிக்கும் இப்­ப­டத்­துக்கு முத­லில் 'நானே வரு­வேன்' என்று தலைப்பு வைக்­கப்­பட்­டி­ருந்­தது. பூசை போட்ட கையோடு முதல் தோற்­றச் சுவரொட்டி­யும் வெளி­யி­டப்­பட்­டது.

அண்­ண­னும் தம்­பி­யும் நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு இணைந்­துள்­ள­னர் என்­ப­தால் இப்­ப­டம் குறித்த எதிர்­பார்ப்பு கோடம்­பாக்­கத்­தில் எகி­றிக் கிடக்­கிறது.

வெளியீட்டு உரிமையைப் பெற பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்­நி­லை­யில், 'நானே வருவேன்' என்ற தலைப்பை செல்­வ­ரா­க­வன் மாற்ற விரும்­பு­வ­தாக ஒரு தக­வல் அண்­மை­யில் வெளி­யா­னது. 'ராயன்' என்­ப­து­தான் புதுத்­த­லைப்பு என்­றும் கூறப்­பட்­டது. ஆனால் திடீரென 'இப்­ப­டத்­தின் தலைப்பு மட்­டும் மாற­வில்லை, கதையே மாறு­கிறது' என்­கி­றார்­கள் விவ­ர­ம­றிந்­த­வர்­கள்.

தனு­ஷுக்கு ஏற்ப வட­சென்னையை மையப்­ப­டுத்தி புதுக்­கதையை அமைத்­துள்­ளா­ராம் இயக்­கு­நர் செல்வா. இது மூன்று அண்ணன், தம்­பி­க­ளுக்கு இடையே நடை­பெ­றும் கதை என்­றும் தனுஷின் தம்­பி­யாக நடிக்க விஷ்ணு விஷாலிடம் பேச்­சு­வார்த்தை நடப்­ப­தா­க­வும் தக­வல். அநே­க­மாக வரும் செப்­டம்­பர் மாதம் படப்­பி­டிப்பு தொடங்­கக்கூடும்.

ஏன் இந்த திடீ­ர் மாற்­றம்?

"இயக்­கு­நர் எடுத்த முடிவை தனுஷ் ஏற்­றுக்கொண்­டார். புதிய மாற்­றங்­களில் அவ­ருக்­கும் உடன்­பாடு உள்­ளது," என்­கிறது அவ­ரது தரப்பு.

செல்வா முத­லில் சொன்ன 'நானே வரு­வேன்' கதை திகில் சம்­ப­வங்­களை மைய­மா­கக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­த­தாம். அத­னால் செல்வா இதற்கு முன்பு இயக்­கிய 'நெஞ்­சம் மறப்­ப­தில்லை' சாயல் இருப்­ப­தாக தயா­ரிப்­புத் தரப்­பி்ல் கூறப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

எனவே உட­ன­டி­யாக தமது உதவி­யா­ளர்­க­ளு­டன் விவா­தம் நடத்தி, 'புதுப்­பேட்டை' போன்று அதி­ர­டி­யான ஒரு கதையை எழுதி வட­சென்­னையை மீண்­டும் கதைக் களமாக அமைத்­துக்கொண்­டுள்­ளார் செல்­வ­ரா­க­வன்.

தனுஷ் கைவ­சம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலி­வுட் என பத்­துக்­கும் மேற்­பட்ட படங்­கள் உள்­ளன. இவற்­றுள் எந்­தப் படம், யாரு­டைய இயக்­கத்­தில் வெளி­யா­கும் என்­பதை அவர்­தான் தீர்­மா­னிக்க இய­லும் என்­கி­றார்­கள். மேலும், ஒரே சம­யத்­தில் இரண்டு படங்­களில் நடிக்­க­வும் அவர் முடிவு செய்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்கு முன்பு, 'பட்டாஸ்', 'அசுரன்' என ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்த அனுபவம் அவருக்கு உள்ளது.