நாயகர்களின் நகர்வுகள்

நாயகர்களின் நகர்வுகள்

3 mins read
95286eb1-7a33-4bfe-86f4-0cf03fcc5639
-

தமிழ் சினி­மா­வின் முன்­னணி கதா­நா­ய­கர்­கள் அடுத்து நடிக்க உள்ள படங்­கள், அவர்­க­ளின் அடுத்­த­கட்ட நகர்­வு­கள் குறித்த தொகுப்பு இது.

எப்­போ­தும் கல­க­லப்­பான கதைக்­க­ளங்­களில் நடிக்க விரும்­பு­வார் ஆர்யா. அதேசம­யம் திடீர் திடீ­ரென விறு­வி­றுப்­பான, சவா­லான பாத்­தி­ரங்­க­ளி­லும் அவ­ரைப் பார்க்க முடி­யும்.

தற்­போது பா. ரஞ்­சித் இயக்­கத்­தில் உரு­வா­கி­யுள்ள 'சார்­பட்டா பரம்­பரை' படத்­தில் குத்­துச்­சண்டை வீர­ராக நடித்­துள்ள ஆர்யா, அடுத்து லிங்­கு­சாமி இயக்­கத்­தில் நடிக்க உள்­ளார். இது நேர­டித் தெலுங்­குப் பட­மாக உரு­வா­கிறது. இதில் ஆர்யா வில்­ல­னாக நடிக்­கி­றார் என்­ப­து­தான் சிறப்­பம்­சம். 'சார்­பட்டா' பெரிய தொகைக்கு விற்­ப­னை­யா­ன­தும், அப்­படத்­தில் ஆர்யா வெளிப்­ப­டுத்தி உள்ள நடிப்­புக்­காக அவ­ருக்­குப் பல விரு­து­கள் கிடைக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், வில்­ல­னாக நடிக்க அவர் ஒப்­புக்­கொண்­டது ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. லிங்­கு­சாமி இயக்­கத்­தில் தெலுங்கு முன்­னணி நடி­கர் ராம் பொத்­தி­னேனி நடிக்­கும் படத்­துக்­காக வலு­வான வில்­லன் கதா­பாத்­தி­ரம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாம்.

அது­கு­றித்து ஆர்­யா­வி­டம் அண்­மை­யில் லிங்­கு­சாமி விவ­ரிக்க, அடுத்த நிமி­டமே இதில் நடிக்க தான் தயார் என்­றா­ராம் ஆர்யா. மிக விரை­வில் அவர் படப்­பி­டிப்­பில் இணைய உள்­ள­தா­கத் தக­வல். இது­கு­றித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கு­மாம்.

தமிழ்த் திரை­யு­ல­கில் முன்­னணி நடி­க­ராக வலம்­வ­ரும் சிவ­கார்த்­தி­கே­யன், அடுத்­த­தாக நடிக்­கும் படம் 'டான்'.

அறி­முக இயக்­கு­நர் சிபி சக்­ர­வர்த்தி இப்­படத்தை இயக்­கு­கி­றார். அனி­ருத் இசை­ய­மைக்­கி­றார். இதன் முதற்­கட்­டப் படப்­பி­டிப்பு கடந்த பிப்­ர­வரி மாதம் பூசை­யு­டன் தொடங்­கி­யது. கோயம்­புத்­தூ­ரில் முக்­கிய காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்­டன. எனினும் கொரோனா ஊர­டங்­கால் பணி­கள் முடங்­கின. இத­னால் கடந்த இரண்டு மாதங்­க­ளாக படப்­பி­டிப்பு நடக்­க­வில்லை. இந்­நி­லை­யில், 'டான்' படத்­தின் படப்­பி­டிப்பு சென்னை­யில் மீண்­டும் தொடங்­கு­கிறது.

ஒரு­வ­ழி­யாக எஸ்.ஜே. சூர்­யா­வை­யும் இணையத்­தொ­டர் பக்­கம் அழைத்து வந்­துள்­ள­னர். 'மாநாடு', 'டான்', 'பொம்மை', 'கட­மையை செய்', 'இற­வாக்­கா­லம்' உட்­பட பல படங்­களில் நடித்து வரு­கி­றார் எஸ்.ஜே. சூர்யா. பல இயக்­கு­நர்­கள் இணை­யத் தொடர்­களில் நடிக்­கக் கேட்டு அணு­கி­ய­போது மறுத்­து­விட்­டார்.

இந்­நி­லை­யில், 'கொலை­கா­ரன்' பட இயக்கு­நர் ஆண்ட்ரூ லூயி­ஸின் தொட­ரில் மட்­டும் நடிக்க சம்­ம­தித்­துள்­ளா­ராம். கார­ணம் ஆண்ட்ரூ சொன்ன கதை. அது மிக­வும் பிடித்­துப் போன­தால் நடிக்க முன்­வந்­துள்­ளார் எஸ்.ஜே. சூர்யா.

இந்த இணை­யத் தொடரை 'விக்­ரம் வேதா' படத்தை இயக்­கிய புஷ்­கர் - காயத்ரி இருவரும் தயா­ரிக்­கின்­ற­னர்.

தமி­ழி­ல் வெற்­றி­பெற்ற 'ராட்­ச­சன்' திரைப்­படத்­தின் இரண்­டாம் பாகம் தெலுங்­கில் உரு­வா­கிறது. இதில் விஜய் சேது­பதி நாய கனாக நடிக்கிறார். சேது­ப­தி­யைப் பொறுத்­த­வரை தமிழ் அல்­லா­மல் பிற­மொ­ழிப் படங்­க­ளிலும் நடித்து வருகிறார். வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளங்­களில் நடிக்க அவர் தயங்­கு­வ­தில்லை.

'ராட்­ச­சன்' படம் கடந்த 2019ல் தெலுங்­கில் 'ராட்­ச­சுடு' என்ற பெய­ரில் மறு­ப­திப்பு செய்­யப்­பட்டு அங்­கும் மிகப்­பெ­ரிய வெற்றி பெற்­றது.

இந்­நி­லை­யில், 'ராட்­ச­சுடு' படத்­தின் இரண்­டாம் பாகம் தயா­ராக உள்­ள­தாக அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ள­னர். முதல் பாகத்தை இயக்­கிய ரமேஷ் வர்மாவே மீண்­டும் இயக்­கு­ந­ரா­கக் கள­மி­றங்­கு­கிறார். இதில்­தான் சேது­ப­தி ஒப்­பந்­தமாக உள்ளார்.

அவர் ஏற்­கெனவே தெலுங்­கில் 'சைரா நர­சிம்மா ரெட்டி', 'உப்­பென்னா' படங்­களில் நடித்­துள்­ளார்.

விஷ்ணு விஷால் நடித்து வரும் 'எஃப்ஐஆர்' படத்­தின் பாடலை நாளை வெளி­யிட உள்­ள­னர். இது அறி­முக இயக்­கு­நர் மனு ஆனந்த் கைவண்­ணத்­தில் உரு­வா­கிறது. விஷ்ணு விஷா­லுக்கு ஜோடி­யாக மஞ்­சிமா மோகன், ரைசா, ரெபா மோனிகா நடித்­துள்­ள­னர்.

மேலும், இயக்­கு­நர் கௌதம் மேன­னும் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார். இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு முடிந்து பின்­னணி பணி­கள் விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், இப்­ப­டத்­தில் இடம் பெறும் 'பய­ணம்' என்ற பாடலை நாளை வெளி­யிட இருப்­ப­தாக படக்­கு­ழு­வி­னர் அறி­வித்­துள்­ள­னர்.

'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்­கிய இளன் அடுத்த படத்­துக்கு தயா­ரா­கி­விட்­டார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறு­வ­னம் தயா­ரிப்­பில் இவர் இயக்­கும் படத்­தில் தனுஷ் நாய­க­னாக நடிக்­கி­றார்.

, :   

ஆர்யா