மருத்துவர் வேடத்தில் நடிக்கும் ஜனனி
முதன் முறையாக மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜனனி.
பரத் நாயகனாக நடிக்கும் படம் 'முன்னறிவான்'. இதில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் ஜனனி.
கதைப்படி தங்கும் விடுதி யில் பணியாற்றி வரும் பரத் திடீரென ஒரு பிரச்சினையை எதிர்கொள்கிறார். அதில் இருந்து மீ்ண்டு வர அவ ருக்குத் தேவையான உதவி களைச் செய்வாராம் ஜனனி.
"முதன் முறையாக இதில் மருத்துவர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளது வித்தியாசமான அனுபவமாக உள்ளது," என்று உற்சாகத்துடன் சொல்கிறார் ஜனனி.
'யோகாவால் எல்லாம் மாறிவிட்டது'
திரையுலகத்தினர் மத்தியில் தற்போது யோகா குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது.
பல முன்னணி நாயகிகள் யோகா பயிற்சியில் ஈடுபடும்போது எடுக்கப்படும் படங்களையும் காணொளிப் பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றனர்.
ரகுல் பிரீத் சிங், சமந்தா, ஐஸ்வர்யா தனுஷ், அலியா பட், இந்துஜா ஆகியோரைத் தொடர்ந்து யோகாவின் அருமை பெருமைகளைப் பேசுகிறார் நடிகை மஞ்சிமா மோகன்.
யோகா தன் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டதாகவும் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று எடுத்த முடிவுதான் தாம் இதுவரை எடுத்த முடிவுகளிலேயே ஆகச் சிறந்தது என்றும் மஞ்சிமா கூறுகிறார்.

