‘வாடிவாசல்’ நாவல்: பதிப்பகம், எழுத்தாளருடன் ஒப்பந்தம்

ஜல்­லிக்­கட்டை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு எழு­தப்­பட்ட நாவல் 'வாடி­வா­சல்'. எழுத்­தா­ளர் சி.சு. செல்­லப்­பா­வின் இந்த படைப்பை திரைப்­ப­ட­மாக்­கு­கி­றார் வெற்­றி­மா­றன்.

சூர்யா நாய­க­னாக நடிக்­கும் இந்த படம் குறித்த எதிர்­பார்ப்பு ரசி­கர்­கள் மத்­தி­யில் அதி­க­ரித்­துள்­ளது.

நாவல்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு படங்­களை உரு­வாக்­கு­வதில் வெற்­றி­மா­ற­னுக்கு மிகுந்த ஆர்­வம் உண்டு.

இதை­ய­டுத்து 'வாடி­வா­சல்' நாவலை திரைப்­ப­ட­மாக்­கு­வ­தற்­கான அதி­கா­ர­பூர்வ ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தாகி உள்­ளது. இந்த நாவலை பதிப்­பித்­துள்ள காலச்­சு­வடு பதிப்­ப­கம், வெற்­றி­மா­றன், சி.சு.செல்­லப்­பா­வின் மகன் சுப்­ர­ம­ணி­யன் ஆகி­யோர் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர்.

"அப்பா எழு­திய வாடி­வா­சல் நாவல் வெளி­யா­ன­போது எனக்கு இரண்டு வயது. ஆனால் எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் இதைப் பற்றி நண்­பர்­கள் பல­ரி­டம் அப்பா நிறைய பேசி­யி­ருக்­கி­றார்.

"சிறு வயதில் வத்தலகுண்டுவில் இருந்தபோது அப்பா மிராசுதாரராக இருந்த தன் மாமனுடன்தான் அதிக நேரத்தைச் செலவிடுவாராம். அவரது மாமனுக்கு ஜல்லிக்கட்டு மேல் அதிக ஈடுபாடு உண்டு. அவருடைய மாட்டுவண்டியில் ஏறி அப்பா நிறைய இடங்களுக்குச் சென்று வந்துள்ளார்.

"ஜல்­லிக்­கட்டு நடக்­கும் இடத்­துக்­குச் சென்று மாட்டு வண்­டி­யின் மேல் நின்று நிறைய புகைப்­படங்­கள் எடுத்­தி­ருக்­கி­றார். அந்த மாடு­கள் வளர்க்­கப்­படும் ஊர்­களுக்­குச் சென்று அங்­குள்ள மக்­க­ளி­டம் நிறைய தக­வல்­க­ளைச் சேக­ரித்து 'வாடி­வா­சல்' நாவலை எழு­தி­னார்," என்று நினை­வு­கூர்­கி­றார் சி.சு.செல்­லப்­பா­வின் மகன் சுப்­ர­ம­ணி­யன்.

இதற்கு முன்பே பல எழுத்­தா­ளர்­கள் தங்­கள் படைப்­பு­களை திரைப்­ப­ட­மாக்­கு­வ­தற்­கான ஒப்­பந்­தங்­களில் கையெ­ழுத்­திட்­டி­ருந்­தா­லும், ஒரு பதிப்­ப­கத்­து­டன் ஒப்­பந்­தம் ஏற்­பட்­டி­ருப்­பது இதுவே முதல் முறை. எனவே, தமிழ்ப் பதிப்பு, திரை­யு­ல­கில் இது முக்­கிய முன்­னெ­டுப்­பா­கப் பார்க்­கப்­ப­டு­கிறது.

'வாடி­வா­சல்' படத்­தின் படப்­பிடிப்­புக்­கான முன்­னேற்­பா­டு­கள் தொடங்கி உள்­ளன. அநே­க­மாக செப்­டம்­பர் மாத மத்­தி­யில் இப்­படக்­கு­ழு­வி­னரை தென் தமி­ழ­கத்­தின் கிரா­மப் பகு­தி­களில் பார்க்க முடி­யும். இந்­நி­லை­யில், 'வாடி­வா­சல்' படத்­தின் தலைப்பு சுவ­ரொட்­டியை வெளி­யிட்­டுள்­ள­னர்.

இப்­ப­டத்­தில் தந்தை, மகன் என சூர்யா இரட்டை வேடங்­களில் நடிக்க இருப்­ப­தாகக் கூறப்­படுகிறது. தாணு தயா­ரிக்­கி­றார். மேலும் பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

'வாடிவாசல்' படத்தின் சுவரொட்டியில் சூர்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!