நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதை அடுத்து, திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன.
இந்தியில் முன்னணி இயக்குநராக வலம் வந்தாலும், தமிழ்ப் படங்களுக்கு முன்னுரிமை அளிக்க பிரபுதேவா தவறியதில்லை.
தனக்கேற்ற கதைகளாகத் தேர்வு செய்து நடிக்கும் அவர், அடுத்து சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு பூசை போட்ட கையோடு, முதற்கட்டப் பணிகள் தொடங்கின.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, நேற்று முன்தினம் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர்.
பிரபுதேவாவுடன், வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் ஒப்பந்தமாகி உள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார்.
இது முழுநீள அடிதடி படமாக உருவாக இருப்பதாகத் தகவல். வணிகப் படத்துக்குரிய இதர அம்சங்களும் நிச்சயம் இடம்பெறுமாம்.
சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய 'இரண்டாம் குத்து' படம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இம்முறை அவ்வாறு நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளாராம்.
இதற்கிடையே, கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி உள்ளது.
படப்பிடிப்பில் பிரபுதேவா, ரைசா உள்ளிட்ட படக்குழுவினர்.

