காற்பந்தாட்ட வீரர்கள் நடிக்கும் படம்

காற்பந்தாட்ட வீரர்கள் நடிக்கும் படம்

1 mins read
4077ca30-33b0-4fa7-9185-275559445a1b
'No 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு' படத்தில் இடம்பெறும் காட்சியில் மதன், ஐரா. -

காற்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்ட 'No 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு' படத்தில் தமிழக காற்பந்தாட்ட வீரர்களே முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

விளையாட்டுத்துறையில் எவ்வாறெல்லாம் அரசியல் நடக்கிறது, அதனால் வீரர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை இப்படத்தில் அலசி உள்ளனராம்.

பெரும்பாலான காட்சிகளை இரவில் நடப்பதுபோல் எடுத்துள்ளனர். அதற்கான காரணம் படம் பார்க்கும்போது புரியும் என்கிறார் இயக்குநர் ஹரி உத்ரா.

இவர் ஏற்கெனவே 'தெரு நாய்கள்', 'படித்தவுடன் கிழித்துவிடவும்', 'கல்தா' ஆகிய படங்களை தயாரித்த அனுபவம் உள்ளவர்.

"மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக ஐரா நடிக்கிறார். அவரது ஜோடியாக 'அருவி' மதன் நடிக்கிறார்.

"வில்லனாக சண்டைப் பயிற்சியாளர் நரேந்திரன் அறிமுகமாகிறார். 'குவைத்' வித்யாசாகர் எழுதிய பாடல்களுக்கு எ.ஜே. அலிமிர்ஸாக் இசையமைத்துள்ளார்.

"கதை, திரைக்கதை, வசனங்களுக்கு நானே பொறுப்பேற்றுள்ளேன்.

"விளையாட்டை மையப்படுத்தி வெளிவரும் படங்களின் தரம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். அத்தகைய வரவேற்பு எங்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம். கதையும் திரைக்கதையும் அனைத்துத் தரப்பினரையும் கவரும்," என்கிறார் ஹரி உத்ரா.