முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் உள்ளிட்ட நான்கு பேர் இணைந்து நடிக்கும் படம் 'கருங்காப்பியம்'.
'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய படங்களை இயக்கிய டிகே இயக்கத்தில் இப்படம் உருவாகிறது.
கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷாரா, 'லொள்ளு சபா' மனோகர், விஜே பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் ஈரான் நடிகை நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, எஸ்.என். பிரசாத் இசையமைக்கிறார். பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவாகிறது இப்படம்.

