யாருடன் இணைய வேண்டும், எத்தகைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் மிகத்தெளிவாக உள்ளார் பூஜா ஹெக்டே.
விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருபவர், தன் சம்பளத்தை உயர்த்தியதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.
இப்போது தனுஷின் அடுத்த படத்தில் பூஜா தான் கதாநாயகி எனத் தெரிய வந்துள்ளது.
முன்னணி இயக்குநர் ஒருவரது படத்தில் தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒருசேர இப்படம் வெளியாகிறது. மூன்று மொழிகளிலும் அறிமுகமானவர் தனுஷ் என்பதால், அவருக்கேற்ற நடிகைகளைப் பரிசீலித்து வந்த தயாரிப்புத் தரப்பு பூஜாவைத் தேர்வு செய்துள்ளதாம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
இந்தப் படத்துக்காக பூஜா கேட்ட சம்பளத்தை மொத்தமாக அள்ளிக் கொடுக்க முன்வந்துள்ள தாம் தயாரிப்புத் தரப்பு.

