'விக்ரம்' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் பங்கேற்றபோது ஓர் உயர்நிலைப் பள்ளியில் மீண்டும் இணைந்தது போல தாம் உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார் கமல்.
கடந்த 50 ஆண்டுகளில் தாம் திரைப்பட படப்பிடிப்பில் இருந்து விலகி இருந்த மிக நீண்ட காலம் இதுதான் என்று கொரோனா நெருக்கடி, ஊரடங்கு பற்றி அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"நான் மட்டுமல்ல பல தயாரிப்பாளர்கள் ஓராண்டாக படப்பிடிப்பை நடத்தவில்லை. 'விக்ரம்' படக்குழுவினர் அனைவரையும் படப்பிடிப்புக்கு அன்புடன் வரவேற்கிறேன்," என்று கமல் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

