'பாகுபலி' இணையத் தொடரில் நயன்தாரா

2 mins read
c1cb46dc-2a35-412f-b04f-1639506e25ff
'மூக்குத்தி அம்மன்' படத்தில் நயன்தாரா. -

உல­கெங்­கும் உள்ள சினிமா ரசி­கர்­களை வியப்பில் ஆழ்த்திய 'பாகுபலி' திரைப்­ப­டம் இணை­யத் தொட­ராக தயா­ரிக்­கப்­பட உள்­ளது.

எனி­னும், அப்­ப­டத்­தின் முதல் இரண்டு பாகங்­க­ளுக்­கும் 'பாகு­பலி' இணை­யத் தொட­ருக்­கும் இடையே எந்­த­வித தொடர்­பும் இருக்­கா­தாம்.

இந்த தொட­ரின் நாய­கி­யாக நயன்­தாரா நடிக்க இருப்­ப­தாக வெளி­யான தக­வல் ரசி­கர்­கள் மத்தி­யில் எதிர்­பார்ப்­பு­களை அதி­கப்­படுத்தி உள்­ளது.

2015ஆம் ஆண்டு வெளி­யான 'பாகு­பலி' முதல் பாகம் விமர்­சன ரீதி­யி­லும் வசூல் அள­வி­லும் பிரம்­மாண்ட வெற்­றி­யைப் பெற்­றது. இதை­ய­டுத்து 2017ஆம் ஆண்டு அப்­ப­டத்­தின் இரண்­டாம் பாக­மும் வெளி­யாகி சாதனை படைத்­தது.

இந்­நி­லை­யில், 'பாகு­பலி' கதையை மைய­மாக வைத்து இணை­யத் தொடர் ஒன்றைத் தயாரிக்க உள்­ள­னர். இது­வும் ராஜ­மௌலி இயக்­கத்­தில்­தான் உரு­வாகிறது எனத் தக­வல்.

இந்­தத் தொட­ரில் நயன்­தா­ரா­வும் இணை­வார் எனத் தெரி­கிறது.

'பாகு­பலி'யில் ரம்யா கிருஷ்­ணன் ஏற்று நடித்த சிவ­காமி தேவி என்ற ராஜ­மாதா கதா­பாத்­தி­ரம் தனித்­து­வம் வாய்ந்­தது.

"சிவ­கா­மி­யின் இள­மைப் பரு­வத்தை மைய­மாக வைத்து ராஜ­ மௌலி மிகுந்த சுவா­ர­சி­யத்­து­டன் கூடிய திரைக்­க­தையை அமைத்­துள்­ளா­ராம். இது­தான் தற்­போது இணை­யத் தொட­ராக உரு­வா­கிறது.

சிவ­காமி எவ்­வ­ளவு வீர­மான பெண், அவர் தன் மக்­க­ளுக்­காக துணிச்­ச­லு­டன் எதிர்­கொண்ட சவால்­கள், எதி­ரி­களை வென்ற தரு­ணங்­கள் ஆகி­ய­வற்றை விளக்கு வதாக இந்த இணை­யத் தொடர் உரு­வாக்­கப்­படும் என்­றும் சிவ­காமி தேவி கதா­பாத்­தி­ரத்­துக்கு நயன்­தாரா தான் பொருத்­த­மாக இருப்­பார் என்று தயா­ரிப்­புத் தரப்பு கரு­து­வ­தா­க­வும் அண்­மை­யில் ஒரு தக­வல் வெளி­யா­னது.

இந்­நி­லை­யில், நயன்­தா­ரா­வு­டன் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்தை நல்­ல­வி­த­மாக முடிந்­துள்­ள­தாம். எட்டு பாகங்­கள் கொண்ட இந்த இணை­யத் தொட­ரில் நடிக்க, மூன்று திரைப்­ப­டங்­க­ளுக்கு நயன்­தாரா பெறக்­கூ­டிய சம்­ப­ளத்­துக்கு இணை­யாக பெருந்­தொ­கையை வழங்க தயா­ரிப்­புத் தரப்பு ஒப்­புக்கொண்­டுள்­ள­தாம்.

வரும் செப்­டம்­பர் மாதம் படப்­பி­டிப்பை துவங்க உள்­ள­னர். அனே­க­மாக அடுத்த ஆண்டு மத்­தி­யில் 'பாகு­பலி' இணை­யத் தொடர் வெளி­யா­கக் கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

காஜல், தமன்னா, சமந்தா உள்­ளிட்ட முன்­னணி நாய­கி­கள் பலர் இணை­யத் தொடர்­களில் நடித்து வரு­கின்­ற­னர். தற்­போது நயன்­தாரா­வும் அவர்­க­ளு­டன் இணைய உள்­ளார்.

"நயன்­தாரா வரு­கை­யால் 'ஓடிடி' தளங்­க­ளைப் பார்ப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும். மேலும் திரை­யு­ல­கைச் சேர்ந்த பல­ருக்கும் வேலை வாய்ப்­பு­கள் கிடைக்­கும்.

"அதே­ச­ம­யம் கலை­ஞர்­களும் அதிக சம்­ப­ளத்தை எதிர்­பார்க்­க­லாம். 'பாகு­பலி'யின் இரண்டு பாகங்களுக்கு முன்­னர் என்­ன­வெல்­லாம் நடந்­தன என்­பதை அறிய ரசி­கர்­களும் ஆவ­லாக இருப்­பார்­கள். இந்த இணை­யத் தொடர் உலக ரசி­கர்­க­ளை­யும் எளி­தில் சென்­ற­டை­யும் என நம்­ப­லாம்," என்கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவரப் புள்­ளி­கள்.