திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
344f9ed0-a3cb-4dc2-b5c6-a8332d6afbfe
-
multi-img1 of 2

வெளியானது படம்: நிதி கோபம்

நீச்சல் உடையுடன் தாம் காட்சி தரும் புகைப்படம் வெளியானதால் கடும் கோபத்தில் உள்ளார் இளம் நாயகி நிதி அகர்வால்.

அக்குறிப்பிட்ட படம் அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்டதாம். இத்தனை நாள்களாக அதை யாரிடமும் காட்டாமல் ரகசியமாக வைத்திருந்தாராம்.

இந்நிலையில் கடந்த வாரம் இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. சூட்டோடு சூடாக ஆயிரக்கணக்கானோர் அதை பகிர்ந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் நிதி.

"எனது தனிப்பட்ட புகைப்படத்தை எனது அனுமதி இல்லாமல் ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். மனசாட்சி உள்ளவர்கள் இப்படியொரு வேலையைச் செய்யமாட்டார்கள். அந்தப் புகைப்படத்தைப் பகிர வேண்டிய அவசியமே இல்லை," என தமது டுவிட்டர் பதிவில் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் நிதி அகர்வால்.

தமது புகைப்படம் எவ்வாறு வெளியே கசிந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறாராம். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடித்து வருகிறார் நிதி.

நக்சலைட் வேடத்தில் நிவேதா

வித்தியாசமான கதைக்களம், சவாலான வேடம் என்றால் நடிக்கத் தயார் என்று சொல்லாத கதாநாயகிகள் இல்லை. ஆனால் ஒருசிலர் இப்படிச் செய்திருக்கிறார்கள். அவர்களில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். புதிய தெலுங்குப் படம் ஒன்றில் அவர் நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளார்.

'விராட பருவம்' என்ற தலைப்பில் உருவாகும் அப்படத்தில் ராணா டகுபதி நாயகனாக நடித்துள்ளார். வேணு உடுகுலா இயக்கும் படம் இது.

"கதையைக் கேட்ட உடனேயே அதில் நடிக்க வேண்டும் என்று தோன்றும். அப்படிப்பட்ட கதை இது. இதுபோன்ற சவாலான வேடங்களில் நடிக்கும்போது ஒரு நடிகையாக என் தன்னம்பிக்கை அதிகரிப்பதை உணர முடிகிறது," என்கிறார் நிவேதா.

படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்பப் பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படம் விரைவில் திரைகாண உள்ளதாகத் தகவல்.