அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி உள்ள 'நரகாசூரன்' படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது.
'துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஸ்ரேயா நாயகியாக நடித்துள்ளார். மேலும், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
சில பிரச்சினைகளால் இப்படம் நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி முன்னணி 'ஓடிடி' தளத்தில் 'நரகாசூரன்' வெளியாக உள்ளது.

