விஜய் தம்பியை மறக்க மாட்டோம்: நாசர் மனைவி உருக்கம்

விஜய் தம்பியை மறக்க மாட்டோம்: நாசர் மனைவி உருக்கம்

1 mins read
72471c69-20e6-4ee7-9f8c-f4e3cab57b11
நடிகர் நாசர் மகன் ஃபைசலின் பிறந்தநாள் நிகழ்வில் விஜய். -

நடி­கர் விஜய்­யின் பெருந்­தன்­மையை வாழ்­நாள் முழு­வ­தும் மறக்க இய­லாது என்று நடி­கர் நாச­ரும் அவ­ரது மனைவி கமீ­லா­வும் நெகிழ்­கின்­ற­னர்.

இது தொடர்­பாக கமீலா நாசர் வெளி­யிட்­டுள்ள காணொ­ளிப் பதிவு இணை­யத்­தில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

நாச­ரின் மூத்த மகன் ஃபைசல். விபத்து ஒன்­றில் சிக்­கிப் படு­கா­யம் அடைந்த அவர் தமது கடந்­த­கால நினை­வு­கள் அனைத்­தை­யும் இழந்து­விட்­டார். எனி­னும், நடி­கர் விஜய் தொடர்­பான விஷ­யங்­களை மட்­டும் அவர் மறக்­க­வில்லை.

அத­னால் விஜய் நடித்த படங்­கள், பாடிய பாடல்­கள் ஆகி­ய­வற்றை மட்­டுமே பார்ப்­பதை வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார். விபத்­துக்­குப் பிறகு ஃபைசலின் வாழ்க்கை இப்­படித்­தான் நகர்­கிறது.

இது­கு­றித்து கேள்­விப்­பட்ட விஜய் மிக­வும் நெகிழ்ந்து, நாச­ரின் வீட்­டுக்­குச் சென்று அவ­ரு­டைய மக­னு­டன் நேரம் செல­விட்­டுள்­ளார். மேலும், ஃபைசலின் பிறந்த நாளன்று விஜய் அவ­ரு­டன் கேக் வெட்­டிக் கொண்­டா­டிய புகைப்­ப­டம் இணை­யத்­தில் வெளி­யா­னது.

இந்­நி­லை­யில், காணொ­ளி­யில் பேசி­யுள்ள கமீலா, விஜய்யை 'தம்பி' என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

"தம்பி விஜய்யை எங்­கள் வாழ்­நா­ளில் மறக்க மாட்­டோம்," என்று தமது டுவிட்­டர் பக்­கத்­தி­லும் அவர் பதி­விட்­டுள்­ளார்.

இதை­ய­டுத்து நாசர் மக­னுக்கு விஜய் ரசி­கர்­களும் வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர். இதற்­கி­டையே, வெளி­நாட்டு காருக்கு இறக்­கு­மதி வரி செலுத்­து­வது தொடர்­பில் உரு­வான சிக்­க­லால் விஜய் தரப்பு கடும் வருத்­தத்­தில் உள்­ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இந்­நி­லை­யில் விஜய் தரப்­பில் உள்ள நியா­யத்தை முன்­வைக்­கும் வகை­யில் 'பீஸ்ட்' படத்­தில் ஏதே­னும் சில காட்­சி­கள் இடம்­பெற வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­வது ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி உள்­ளது.