'பறந்து பறந்து நடிக்கிறேன்'

'பறந்து பறந்து நடிக்கிறேன்'

3 mins read
cbfb882f-684b-4fb0-8161-b24f42a9a7fb
-

'பீஸ்ட்' படத்­தில் விஜய்­யு­டன் நடிக்க ஒப்­பந்­த­மான பின்­னர் பூஜா ஹெக்­டே­வின் மதிப்பு மள­ம­ள­வென்று உச்­சத்­துக்கு சென்­று­விட்­டது. இதை­ய­டுத்து தனது சம்­ப­ளத்தை அவர் கணி­ச­மாக உயர்த்தி உள்­ள­தா­கத் தக­வல்.

தெலுங்­கில் முன்பு இலி­யானா ஒரு கோடி ரூபாய் சம்­ப­ளம் கேட்­ட­போது திரை­யு­லகத்­தி­னர் வாய் பிளந்­த­னர். "இவ்­வ­ளவு பெரிய தொகையா?" என்ற கேட்­டா­லும், அதைக் கொட்­டிக்­கொ­டுக்க பல தயா­ரிப்­பா­ளர்­கள் தயா­ராக இருந்­த­னர்.

எனி­னும் அந்த வாய்ப்பை முழு­மை­யாகப் பயன்­ப­டுத்­திக்கொள்ள தவ­றி­னார் இலி­யானா. பாலி­வுட்­டில் கிடைத்த ஓரிரு வாய்ப்­பு­களை நம்பி அவர் தெலுங்குதேசத்­தைக் கைவிட, ஒரு கட்­டத்­தில் பாலி­வுட் இவரை மறந்து­போ­னது தனிக்­கதை.

இலி­யா­னா­வைப் பொறுத்­த­வரை புத்­தி­சா­லித்­த­னத்­து­டன் செயல்­ப­டு­கி­றார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி­க­ளி­லும் தேடி­வ­ரும் எந்­த­வொரு நல்ல வாய்ப்­பை­யும் அவர் இழப்­ப­தாக இல்லை. கதை கேட்டு, அது பிடித்­துப்­போ­னால் உடனே கால்­ஷீட் ஒதுக்­கு­கி­றார். அதே­ச­ம­யம் சம்­பள விஷ­யத்­தில் கறார் காட்­டு­வது பூஜா­வின் வழக்கம்.

இன்­றைய தேதி­யில் தெலுங்­கில் அதிக சம்­ப­ளம் வாங்­கு­வது இவர்­தான். முன்­னணி நிறு­வ­னங்­கள், இயக்­கு­நர்­க­ளின் படங்­கள் என்­றால் சுமார் நான்கு கோடி ரூபாய் சம்­ப­ளம் பெறு­கி­றார் பூஜா.

எனி­னும், படப்­பி­டிப்­பின்­போது பூஜா கொடுக்­கும் ஒத்­து­ழைப்­பில் எந்­த­வித குறை­யும் காண முடி­யாது என்ற நல்ல பெயரை சம்­பா­தித்­துள்­ளார்.

சம்­ப­ளப் பட்­டி­ய­லில் இவரை முந்­திக்­கொண்டு முத­லி­டத்­தில் இருப்­ப­வர் நயன்­தாரா. எனி­னும் அவர் முன்­னணி கதா­நா­ய­கர்­க­ளு­டன் இணைந்து நடிக்­கும் படங்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து குறைந்து வரு­கிறது. அத­னால் இயக்­கு­நர்­களும் தயா­ரிப்­பா­ளர்­களும் அவ­ருக்கு அடுத்த இடத்­தில் உள்ள பூஜாவை தேடி வந்து ஒப்­பந்­தம் செய்­கிறார்­கள்.

"நான் முதன்­மு­த­லாக நடித்த படம் 'முக­மூடி'. எனவே என்னை அறி­மு­கப்­ப­டுத்­திய கோடம்­பாக்­கத்தை மறக்­கவே இய­லாது. அதன் பிறகு இரண்டு ஆண்­டு­கள் நல்ல வாய்ப்­பு­களை ஏற்க முடி­ய­வில்லை. அதன் பிறகு தெலுங்­கில் சில வாய்ப்­பு­கள் தேடி வந்­தன. அதற்­காக தமிழ் ரசி­கர்­களை மறந்­து­விட்­டேன் என்று சொல்­வது சரி­யல்ல.

"தெலுங்­கில் 'ஒக லைலா கோஸம்' மூலம் மீண்­டும் நடிக்க வந்­த­போது நானே எதிர்­பா­ராத வகை­யில் 'முகுந்தா' பட வாய்ப்பு கிடைத்­தது. அடுத்து, இந்­தி­யில் 'மொஹஞ்­ச­தாரோ' என நான் நடித்த படங்­கள் வசூல் ரீதி­யில் வெற்­றி­பெற்­றன. எனக்­கான நல்ல நேரம் தொடங்­கி­யதை உணர முடிந்­தது," என்­கி­றார் பூஜா.

ராம் சரண், அக்­‌ஷய் குமார், ஜூனி­யர் என்டிஆர், மகேஷ் பாபு, அல்லு அர்­ஜுன் என இந்­தி­யி­லும் தெலுங்­கி­லும் பல முன்­னணி நாய­கர்­க­ளு­டன் இணைந்து நடித்த பூஜா, நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு இப்­போது நெல்­சன் இயக்­கத்­தில் 'பீஸ்ட்' படத்­தில் விஜய்­யு­டன் 'டூயட்' பாடு­கி­றார்.

தெலுங்கு ரசி­கர்­கள் இவர் ஒரு படத்­தில் ஏற்று நடித்த 'புட்ட பொம்மா' என்ற கதா­பாத்­தி­ரத்தை வைத்தே இவ­ரைக் குறிப்­பிடு­கி­றார்­கள்.

"அந்த வகை­யில் நான் கொடுத்துவைத்த நடிகை என­லாம். ரசி­கர்­க­ளின் பாச­மும் ஆத­ர­வும் இல்லை என்­றால் முப்­பது வயதை எட்­டி­விட்ட ஒரு கதா­நா­ய­கி­யால் திரை­யு­ல­கில் முன்­னணி நாய­கி­யா­கத் தாக்­குப்­பி­டிக்க முடி­யாது.

"எனக்­கான வாய்ப்­பு­கள் தொடர்ந்து கிடைத்து வரு­கின்­றன," என்று சொல்­லும் பூஜா, இப்­போது அகில் அக்­கி­னே­னி­யு­டன் 'மோஸ்ட் எலி­ஜி­பிள் பேச்­சி­லர்', பிர­பா­ஸு­டன் 'ராதே ஷ்யாம்', சிரஞ்­சீவி, ராம்­ச­ர­ணு­டன் 'ஆச்­சார்யா', ரன்­வீர் சிங்­கு­டன் 'சர்க்­கஸ்', சல்­மான் கானு­டன் 'பாய்­ஜான்' என ஓய்­வில்­லா­மல் பறந்து பறந்து நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.

இந்­திய ஊட­கங்­கள் பூஜாவை 'விமா­னத்­தில் வாழ்­ப­வர்' என்­று­தான் குறிப்­பிடு­கின்­றன. அவ­ரும் இதை ஒப்­புக்­கொள்­கி­றார்.

மும்­பைப் பெண்­ணான இவர், அனைத்து மொழி­க­ளி­லும் நடிப்­ப­தால் சம்­ப­ளத்­தைப் போலவே ரசி­கர் கூட்­ட­மும் அதி­க­ரித்து வரு­கிறது. ரசிகர்­களுக்­கா­கவே சமூக வலைத்­த­ளங்­களில் வாரந்­தோ­றும் ஏதா­வது தக­வல்­கள், புகைப்­ப­டங்­க­ளைப் பதி­வி­டு­வது இவ­ரது வழக்­கம்.

"உண்­மை­யா­கவே அங்­கும் இங்­கு­மாக விமானத்­தில் பறந்­த­படி இருக்­கி­றேன். பல விஷ­யங்­களைச் செய்ய முடி­ய­வில்லை. முக்­கி­ய­மான வேலை­களில் கவ­னம் செலுத்த முடி­ய­வில்லை என்­ப­தும் உண்மை. ஆனால் சமூக வலைத்­தளங்­கள் மூலம் ரசி­கர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாட மட்­டும் தவ­று­வதே இல்லை," என்கிறார் பூஜா.