வெற்றிமாறன் படத்தில் மீண்டும் ஆண்ட்ரியா

வெற்றிமாறன் படத்தில் மீண்டும் ஆண்ட்ரியா

1 mins read
18b75b81-083f-464d-ba82-3baf5b87c3d3
'வட சென்னை' படத்தில் இயக்குநர் அமீர், ஆண்ட்ரியா. -

கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு ஏற்ப நடி­கர், நடி­கை­ய­ரைத் தேர்வு செய்­வ­தில் இயக்­கு­நர் வெற்­றி­மா­றன் கெட்­டிக்­கா­ரர். தனது தயா­ரிப்­பில் உரு­வா­கும் புதிய படத்­தில் நடிக்க ஆண்ட்­ரி­யாவை ஒப்­பந்­தம் செய்­துள்­ளார்.

ஏற்­கெ­னவே வெற்­றி­மா­றன் இயக்­கத்­தில் தனுஷ் நடித்த 'வட­சென்னை' படத்­தில் நடித்­துள்­ளார் ஆண்ட்­ரியா. அதன் மூலம் அவ­ருக்­கான ரசி­கர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தது.

இந்­நி­லை­யில் வெற்­றி­மா­ற­னின் கிராஸ் ரூட் புரொ­டக்­‌ஷன்ஸ் தயா­ரிக்­கும் புதிய படத்தை அறி­முக இயக்­கு­நர் ஆனந்த் என்­ப­வர் இயக்­கு­கி­றார். இப்­படத்தில் இடம்­பெற்றுள்ள ஒரு கதா­பாத்­தி­ரத்­துக்கு ஆண்ட்­ரியா பொருத்­த­மாக இருப்­பார் என ஆனந்­துக்கு ஆலோ­சனை வழங்­கி­னா­ராம் வெற்­றி­மா­றன்.

தயா­ரிப்­பா­ள­ரும் மூத்த இயக்கு­நரு­மான அவரே வலிய வந்து இவ்­வாறு கருத்து தெரி­வித்த பிறகு ஆனந்த் வேறு எது­வும் யோசிக்­கா­மல் உட­ன­டி­யாக ஆண்ட்­ரி­யாவை சந்­தித்­துப் பேசி­யுள்­ளார்.

இது ஒரு பெண் கதா­பாத்­தி­ரத்தை மையப்­ப­டுத்தி உரு­வாக்­கப்­படும் படம். இதன் மூலம் ஆண்ட்­ரி­யா­வுக்கு தமிழ் ரசி­கர்­கள் மத்­தி­யில் கூடு­தல் வர­வேற்பு கிடைக்­கும் என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்­தி­னர்.

வெற்­றி­மா­றன் இதற்­கு­முன் இயக்­குநர் 'சங்­கத்­த­லை­வன்' என்ற படத்தைத் தயா­ரித்­துள்­ளார். மேலும், ராகவா லாரன்ஸ் நடிக்­கும் 'அதிகாரம்' ப­டத்­துக்­கான கதையை எழுதி, ஃபைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து தயா­ரிக்­கி­றார்.