வெளியாகும் முன்பே அஜித் படம் சாதனை

எந்­த­வித முன்­ன­றி­விப்­பும் இன்றி வெளி­யாகி, அஜித் ரசி­கர்­களை உற்­சா­க­ம­டைய வைத்­துள்­ளது 'வலிமை' பட சுவ­ரொட்­டி­கள்.

ஜூலை 12ஆம் தேதி காலை­யில் அறி­விக்­கப்­பட்டு மாலை­யில் வெளி­யான முதல் தோற்ற சுவ­ரொட்­டியை லட்­சக்­க­ணக்­கா­னோர் உட­னுக்­கு­டன் பார்த்து ரசித்­த­னர்.

ஐந்தே நிமி­டங்­களில் அதி­கம் பேரால் பார்க்­கப்­பட்ட திரைப்­படச் சுவ­ரொட்டி என்ற சாத­னை­யில் தொடங்கி, அதி­க­மா­னோர் விரும்­பிய, பகிர்ந்த சுவ­ரொட்டி என்ற சாத­னை­யை­யும் சத்­த­மின்­றிச் செய்­தி­ருக்­கிறது 'வலிமை'.

இத்­து­டன் நிற்­கா­மல் இப்­ப­டத்­தில் யாரெல்­லாம் நடித்­துள்­ள­னர், படப்­பி­டிப்பு முடிந்துவிட்­டதா, எப்போது படம் வெளி­யா­கும் என்­ப­தற்­கெல்­லாம் உரிய விவ­ரங்­கள் கிடைத்­துள்­ளன. இது ரசி­கர்­களுக்கு மற்­றொரு வகை­யில் ஆச்சரி­யத்தை ஏற்­ப­டுத்த உள்­ளது.

கடந்த 2019, ஆகஸ்ட் 29ஆம் தேதி 'வலிமை' படத்­துக்கு பூசை போடப்­படும் என்ற அறி­விப்பு வெளி­யா­னது. பிறகு அக்­டோ­பர் 18ஆம் தேதிக்கு பூசை தள்ளி வைக்­கப்­பட்­டது. எனி­னும் அன்­றைய தினம் வேறு தடை­கள் இல்­லா­மல் பூசை நடந்து படப்­பி­டிப்­பும் துவங்­கி­யது.

யுவன் ஷங்­கர் ராஜா இசை, நீரவ் ஷா ஒளிப்­ப­திவு, கலை இயக்கு­நர் தோட்டா தரணி என முன்­னணி கலை­ஞர்­க­ளு­டன் கூட்­டணி அமைத்து கள­மி­றங்­கி­னார் இயக்­கு­நர் எச்.வினோத்.

வில்­ல­னாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, அஜய் தேவ்­கன், அர­விந்த் சுவாமி எனப் பல­ரது பெயர்­கள் பரி­சீ­லிக்­கப்­பட்டு, கடை­சி­யில் தெலுங்கு 'ஆர்.எக்ஸ் 100' படப் புகழ் கார்த்­தி­கேயா ஒப்­பந்­த­மா­னார்.

கிட்­டத்­தட்ட 700 நாள்­கள் இப்­படம் குறித்த மேல­திக தக­வல்­க­ளுக்­காக அஜித் ரசி­கர்­கள் காத்­துக்­கி­டந்­த­னர். அத­னால் அவ்­வப்­போது பொறுமை இழந்து சமூக வலைத்­த­ளங்­களில் சில­வற்­றைப் பதி­விட்­ட­னர் என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்­ளி­கள்.

மேலும், 'வலிமை' பட வேலை­கள் தொடங்­கி­யது முதல் எல்­லாமே எதிர்­பா­ராத வகை­யில் நிகழ்­வ­தா­க­வும் சுட்­டிக் காட்­டு­கி­றார்­கள்.

"முத­லில் பூசை நடக்­கும் தேதி­யும் நேர­மும் மாற்­றப்­பட்­டது. அடுத்து, 2019 டிசம்­பர் 13ஆம் தேதி படப்­பி­டிப்பு தொடங்­கும் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில் இரண்டு நாட்­க­ளுக்கு முன்­ன­தா­கவே ஹைத­ரா­பாத்­தில் காட்­சி­க­ளைப் பட­மாக்கு­வோம் என்று கூறி­விட்­டார் அஜித்.

இரண்டு அதி­ரடி சண்­டைக் காட்­சி­களை முத­லில் பட­மாக்­கி­னர். வழக்­க­மாக நகைச்­சு­வைக் காட்­சி­கள் முத­லில் பட­மாக்­கப்­படும். ஆனால் அஜித் இதி­லும் வித்­தி­யா­சம் காட்­டி­யுள்­ளார். அடுத்­தக்­கட்டப் படப்­பி­டிப்பை சென்­னை­யில் நடத்த திட்­ட­மிட்­ட­போதுதான் இரு­சக்­கர வாகன விபத்­தில் சிக்­கினார். இத­னா­லும், பிறகு கொரோ­னா­வா­லும் படப்­பி­டிப்பு பாதிக்­கப்­பட்­டது.

"வெளி­நா­டு­களில் எடுக்­கப்­பட வேண்­டிய சண்டை, கார்-மோட்டா் பந்­த­யங்­களை உள்­ள­டக்­கிய காட்சி­களை எப்­படி எடுப்­பது என இயக்­கு­நர் வினோத்­தும் கவ­லை­யில் மூழ்­கி­னார். அஜித்தோ வழக்­கம்­போல் கவ­லைப்­ப­டா­மல் யோசித்து, மாற்று ஏற்­பா­டு­க­ளைச் செய்­ய­லாம் என்­றா­ராம். அவர் அளித்த ஊக்­கத்தை அடுத்து சுவிட்­சர்­லாந்து, சுவீ­டன், மொராக்­கோ­வில் எடுக்க வேண்­டிய காட்­சி­களை இந்­தி­யாவி­லேயே பட­மாக்கி உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!