விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இது தொடர்பாக நிலவிய சிக்கல் சுமுகமான முடிவை எட்டியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'துக்ளக் தர்பார்'.
விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரபல 'ஓடிடி' நிறுவனம் நல்ல தொகைக்கு விலை பேச, ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. எனினும் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஏற்கெனவே ஒரு நிறுவனத்திடம் விற்றுவிட்டார் தயாரிப்பாளர்.
இதையறிந்த 'ஓடிடி' நிறுவனம், தொலைக்காட்சி உரிமையை அளித்தால் மட்டுமே ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் திட்டவட்டமாகக் கூறியது. தனியார் தொலைக்காட்சி நிறுவனமும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. இதனால் பட வெளியீடு முடங்கியது.
இந்நிலையில் பலமுறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக முதலில் தொலைக்காட்சியில் வெளியிடுவது என்றும், அதே தினத்தன்று இரவு 'ஓடிடி' தளத்தில் வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்
, :

