'கனவு போன்று இருந்தது'

3 mins read
1a95c7b9-58d1-4e2d-9a4f-45b11fc6d0b7
-

நடி­கர் அர­விந்த்­சாமி இயக்­கு­ந­ராக மாறி­யுள்­ளார். இயக்­கு­நர் மணி­ரத்­னத்­தின் தயா­ரிப்­பில் உரு­வா­கி­யுள்ள 'நவ­ரசா' என்ற 'ஆந்­தா­லஜி' வகை திரைப்­ப­டத்­தில் இவ­ரும் ஒரு பகுதியை இயக்கி உள்­ளார்.

'ரௌத்­தி­ரம்' என்ற தலைப்­பில் எடுக்­கப்­பட்­டுள்ள அந்­தப் பகு­தி­யில் 'பிக்­பாஸ்', 'கபாலி' மூலம் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்த ரித்­விகா முக்­கிய கதா­பாத்­திரத்­தில் நடித்­துள்­ளார்.

அர­விந்த்­சாமி இயக்­கத்­தில் நடித்­தோம் என்­பது ஏதோ கற்­பனை போல் உள்­ள­தாக அண்­மைய பேட்­டி­யில் கூறியுள்ளார் ரித்­விகா.

தாம் அவ­ரது தீவிர ரசிகை என்­றும் 'ரௌத்­தி­ரம்' மூலம் தாம் நிறைய கற்­றுக்கொண்­ட­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார்.

"அர­விந்த்­சாமிக்­குள் ஓர் இயக்­கு­நர் ஒளிந்து கொண்­டி­ருந்­தார் என்­பது எல்­லோ­ருமே யூகித்த விஷ­யம்­தான்.

"எனி­னும் இந்த அளவு நேர்த்­தி­யா­கச் செயல்­ப­டு­வார் என எதிர்­பார்க்­க­வில்லை," என்கிறார் ரித்­விகா.

அதா­வது, படத்­தில் நடிப்­ப­வர்­க­ளின் ஒவ்வொரு அசை­வை­யும் உன்­னிப்­பாகக் கவ­னிப்­பது, தமது எதிர்­பார்ப்பு என்ன என்­பதை தெளி­வா­கச் சொல்­வது, சுறு­சு­றுப்­பாக இயங்­கு­வது என அசர வைத்­தா­ராம் அர­விந்த்­சாமி.

"1990களில் குழந்­தை­க­ளாக இருந்த அனை­வ­ருக்­குமே அவ­ரைப் பிடிக்­கும். நானும் அதற்கு விதி­வி­லக்­கல்ல. அவ­ரைத் திரை­யில் பார்த்து மகிழ்ந்திருக்­கி­றேன்.

"அப்­ப­டிப்­பட்­ட­வ­ரி­டம் இருந்து திடீ­ரென்று ஒரு­நாள் தொலை­பேசி அழைப்பு வந்­தால் எப்­படி இருக்­கும்?

"நிச்­ச­யம் பட­ப­டப்­பா­க­வும் ஆச்­ச­ரி­ய­மா­க­வும் இருக்­கும். எனக்கும் அப்­ப­டித்­தான் இருந்­தது.

"அவர் கதையை விவ­ரித்­த­போது எனது நினை­வு­கள் எல்­லாம் அவர் நடித்த 'ரோஜா', 'பாம்பே' படங்­களைச் சுற்றி வந்­தது.

"எனது கதா­பாத்­தி­ரம் எப்­படி இருக்கவேண்­டும் என்­பதை அழகாக விவ­ரித்­தார்," என்­கிறார் ரித்­விகா.

படத்­தில் பங்­கேற்ற நடி­கர், நடி­கை­யர், தொழில்­நுட்­பக் கலை­ஞர்­கள் அனை­வ­ரி­டமும் காணொளி வசதி மூலம்­தான் கலந்­து­ரை­யா­டி­னா­ராம் அர­விந்த்­சாமி. கதை, காட்­சி­கள், வச­னங்­கள் ஆகிய அனைத்­தை­யும் இணை­யம் மூல­மா­கவே பகிர்ந்­துள்­ளார்.

"எனக்­கான வச­னங்­க­ளைக் கூட முன்­கூட்டியே அனுப்­பி­விட்­டார். அதே­ச­ம­யம் சில நிபந்தனை­க­ளை­யும் விதித்­தார்.

"வச­னங்­களை மனப்­பா­டம் செய்து பேசக்­கூ­டாது என்­ப­து­தான் மற்ற அனைத்­தை­யும்­விட முக்­கி­ய­மா­னது.

"கதா­பாத்­தி­ரத்­தைப் பற்றி முன்­கூட்­டியே ஒரு தீர்­மா­னத்­துக்கு வந்­து­வி­டக் கூடாது என்­பது அவ­ரது அறி­வுரை. படப்­பி­டிப்­பின்­போது அவரே வச­னங்­கள், முக பாவங்­கள், உடல்­மொழி ஆகி­ய­வற்றை விவ­ரித்­தார்.

"நம்­மையே நேர­டி­யாக வச­னங்­க­ளைப் பேச வைப்­பார். அப்­போது மற்­ற­வர்­கள் பேசக்­கூ­டிய வச­னங்­க­ளைத் தாமே படிப்­பார். இப்­படி ஒவ்­வொரு காட்­சிக்­கும் வச­னத்­துக்­கும் அவர் மெனக்­கெட்­ட­தைப் பார்த்­த­போது வியப்­பாக இருந்­தது.

"பெரிய நடி­கர், ஏரா­ள­மான ரசி­கர்­க­ளைக் கொண்­ட­வர் என்­ற­போ­தி­லும் இப்போதும் கூட அர்ப்­ப­ணிப்­பு­டன் செயல்­ப­டு­கி­றார்," என்று இன்னும் ஆச்­ச­ரி­யம் வில­கா­மல் பேசு­கி­றார் ரித்விகா.

'ரௌத்­தி­ரம்' பகு­திக்­கான படக்­கு­ழு­வி­ன­ருக்­காக சிறப்புப் பட்­டறை ஒன்­றை­யும் ஏற்­பாடு செய்­தி­ருக்­கி­றார் அர­விந்த்­சாமி. அதில் பங்கேற்ற வகை­யில் பல்­வேறு விஷ­யங்­க­ளைக் கற்­றுக் கொண்­ட­தா­கச் சொல்­கி­றார் ரித்­விகா.

"படப்­பி­டிப்பு இடை­வே­ளை­யின்போது அரவிந்த்­சா­மி­யும் ஒளிப்­ப­தி­வா­ளர் சந்­தோஷ் சிவ­னும் சினிமா குறித்து மட்­டுமே பேசு­வார்கள். அதைப் பல­முறை பார்த்­துள்­ளேன். தேவை­யற்ற விஷ­யங்­கள் எது­வுமே அவர்­க­ளு­டைய உரையா­ட­லில் இடம்­பெ­றாது.

"ஒரு காட்­சி­யில் நாம் நன்­றாக நடித்­தால் உட­ன­டி­யா­கப் பாராட்­டு­வார். ஒரு­வேளை சரி­யாக நடிக்­க­வில்­லையோ என்று நாம் நினைப்பதை யூகித்­து­விட்­டால், அரு­மை­யாக இருந்­தது என்று சொல்லி தன்­னம்­பிக்­கையை அதி­க­ரிக்­கச் செய்­வார்.

"நான் காவல்­துறை அதி­கா­ரி­யாக நடித்­தி­ருக்­கி­றேன். எனக்­கான போலிஸ் உடை எனது உடல் அள­வு­க்கு ஏற்ப சரி­யாக இருக்­கி­றதா, அதை அணிந்துகொண்டு நடிப்­ப­தற்கு வச­தியாக உள்­ளதா? என்று கேட்டு உறுதி செய்­தார்.

"ஓர் இயக்­கு­ந­ருக்கு இது­போன்ற விஷ­யங்­கள், அணு­கு­மு­றை­கள் தெரிந்­தி­ருக்கவேண்­டும் என நினைக்­கி­றேன்," என்று சொல்­லும் ரித்­விகா, மீண்­டும் அர­விந்த்­சாமி இயக்­கத்­தில் நடிக்க விரும்­பு­கி­றா­ராம்.

தற்­போது தமி­ழில் இரண்டு, தெலுங்­கில் ஒன்று என மூன்று படங்­களில் நடித்து வரு­பவர், இணை­யத் தொடர் ஒன்­றி­லும் ஒப்­பந்­த­மாகி உள்­ள­தா­கத் தக­வல்.

'நவ­ரசா' வெளி­யீட்­டிற்­காக ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றார் ரித்­விகா.

, :   

ரித்விகா