சுந்தர்.சி: ‘அரண்மனை 3’ குழந்தைகளையும் கவரும்

வழக்­கம்­போல் நிறைய சுவா­ர­சியங்­க­ளு­ட­னும் நகைச்­சு­வை­யா­க­வும் உரு­வாகி உள்­ளது ‘அரண்­மனை 3’.

இந்த மூன்­றாம் பாகத்­தில் ஆர்யா­வும் ராஷி கண்ணா­வும் நாய­கன், நாய­கி­யாக நடித்­துள்­ள­னர்.

வழக்­கம்­போல் இதி­லும் நகைச்­சுவை கலை­ஞர்­களை மொத்­த­மாகக் கள­மி­றக்கி உள்­ளார் இயக்­கு­நர் சுந்­தர்.சி.

பேய்­கள் சம்­பந்­தப்­பட்ட கதை என்­றாலே பாழ­டைந்த பங்­களா, கைவி­டப்­பட்ட பழைய கட்­ட­டம் என்று காட்­டு­வ­தில் தமக்கு உடன்­பாடு இல்லை என்று சொல்­லும் சுந்­தர்.சி, ‘அரண்­மனை’ முதல் பாகத்தை உரு­வாக்­கி­ய­போதே, இந்த நடை­மு­றையை உடைக்க வேண்­டும் என்று முடிவு செய்தாராம்.

அப்­போ­து­தான் கல­க­லப்­பாக இருக்­கும் வீடு, நிறைய கதா­பாத்­தி­ரங்­கள், அதிக நகைச்­சுவை என்று புதிய திட்­டம் மன­தில் உரு­வா­னது என்­கி­றார்.

“ஆனால் அரண்­மனை போன்ற வீட்டை தேடிக்­கண்­டு­பி­டிக்­கத்­தான் அதி­கம் சிர­மப்­பட்­டோம். பிறகு எப்­ப­டியோ குஜ­ராத்­தில் உள்ள அரண்­மனை கிடைத்­தது.

“எல்­லாமே சரி­யாக அமைந்­த­தால் குழந்­தை­கள் முதல் பெரி­ய­வர்­கள் வரை அனை­வ­ருக்­கும் பிடித்­த­மான படத்தை மூன்று பாகங்­க­ளாக ரசிகர்­க­ளுக்குத் தர முடி­கிறது.

‘அரண்­மனை’ பட வரி­சைக்கு ரசி­கர்­க­ளி­டம் கிடைத்­துள்ள அங்­கீ­கா­ரத்­தைத் தக்க வைக்க வேண்­டும் என்­ப­தற்­காக சளைக்­கா­மல் உழைத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­ப­வர், புதிய பாகத்­தி­லும் கதா­நா­ய­கிக்­கும் மற்ற பெண் கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­கும் உரிய முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

“எனது படங்­களில் எப்­போ­துமே நாய­கி­களை முன்­னி­லைப்­ப­டுத்­து­வேன். இம்­முறை நாய­க­னாக ஆர்யா நடித்­துள்­ளார். எனவே அவ­ருக்கு கூடு­தல் முக்­கி­யத்­து­வம் இருக்­கும்.

“நாங்­கள் இரு­வ­ரும் இணைந்து செயல்­பட வேண்­டும் என நீண்ட நாள்­க­ளா­கத் திட்­ட­மிட்டு வந்­தோம். அதற்­கான வாய்ப்­பும் சூழ்­நி­லை­யும் இப்­போ­து­தான் அமைந்­தது.

“கொழு­கொழு என்று வரு­வார் என அனை­வ­ரும் நினைத்­துக் கொண்­டி­ருக்க, முறுக்­கே­றிய உடற்­கட்­டு­டன் வந்து நிற்­கி­றார்.

“ஆர்­யா­வைப் பொறுத்­த­வரை இயக்­கு­நரை நம்பி தம்மை முழு­மை­யாக ஒப்­ப­டைத்து விடு­வார். இயக்­கு­ந­ருக்கு உள்ள சிர­மங்­க­ளை­யும் பொறுப்­பு­க­ளை­யும் நன்கு உணர்ந்­த­வர்.

“ராஷி கண்ணா, ஆண்ட்­ரியா, சாக்‌ஷி அகர்­வால், யோகி பாபு, விவேக் என நிறைய பேர் படத்­தில் இருக்­கி­றார்­கள்.

“இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்­பின் போது நானும் விவேக்­கும் ரொம்ப நெருக்­க­மா­கி­விட்­டோம். தின­மும் படப்­பி­டிப்பு முடிந்­த­தும் இரு­வ­ரும் ஒற்­றை­ய­டிப் பாதை­யில் நடைப்பயிற்சி மேற்­கொள்­வோம். அப்­போது பேசிய விஷ­யங்­கள் எல்­லாம் இப்­போது நினை­வுக்கு வரு­கிறது. அவ­ரது இழப்பு ஈடு செய்ய முடி­யா­தது.

“சிரிப்பு, பயம், திகில், காதல், நட­னம், இனி­மை­யான இசை எனப் பல்­வேறு அம்­சங்­கள் நிறைந்த, தர­மான பட­மாக ‘அரண்­மனை 3’ உரு­வாகி உள்­ளது. இது குழந்­தை­க­ளை­யும் கவ­ரும். ஒவ்­வொரு காட்­சி­யை­யும் திரை­யில் காணும் போது மன­தில் இரட்­டிப்பு மகிழ்ச்சி ஏற்­ப­டு­கிறது,” என்­கி­றார் இயக்­கு­நர் சுந்­தர்.சி.

‘அரண்­மனை 3’ மிக விரை­வில் வெளி­யீடு காண உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!