நாடக கலைஞர்களின் கதை

ஒவ்­வொரு படத்­தி­லும் வித்­தி­யா­ச­மான கதைக்­களத்­தில் தோன்­று­கி­றார் வைபவ். அந்த வகை­யில் அவ­ரது நடிப்­பில் உரு­வா­கிறது 'பஃபூன்'.

அறி­முக இயக்­கு­நர் அசோக் வீரப்­பன் இயக்­கு­கிறார். கார்த்­திச் சுப்­பு­ரா­ஜி­டம் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர்.

படத்­தின் முதல்­தோற்றச் சுவ­ரொட்­டி­யைப் பார்க்கும் அனை­வ­ருமே இது முன்பு தமி­ழ­கத்­தில் பிர­ப­ல­மாக இருந்த நாடக பாணி கதையா? என்று கேட்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு எல்­லாம் அசோக் வீரப்­பன் அளிக்­கும் பதில், "இது நாடக கலை­ஞர்­க­ளைப் பற்­றிய படம். எனி­னும் படம் முழு­வ­தும் நகைச்­சுவைச் காட்­சி­கள் நிறைந்­தி­ருக்­கும்," என்­ப­து­தான்.

"முக்­கி­ய­மான விஷ­யங்­க­ளை­யும் படத்­தில் அலசி உள்­ளோம். ராம­நா­த­பு­ரம், தூத்­துக்­குடி, சிவகங்கை நிலப்­ப­ரப்பு சார்ந்த கதை இது.

"சிறு வயது முதலே எனக்கு நாட­கங்­கள் பார்க்­கப் பிடிக்­கும். ஓராண்­டில் சுமார் இரு­நூறு நாள்­கள் நாட­கங்­கள் அரங்­கே­றும் என்­றால் அவற்­றைப் பார்க்­கும் வரை எனக்­குத் தூக்­கம் வராது.

"நான் சிறு­வ­னாக இருந்த சம­யத்­தில் பொது­வாக நாட­கங்­கள் இரவு பத்து மணிக்கு மேல்­தான் தொடங்­கும். பிறகு விடி­ய­ விடிய நீடித்து, சில சம­யங்­களில் காலை ஆறு மணி வரை நாட­கங்­கள் நீண்­டுள்­ளன.

"அந்­தக் கலை­ஞர்­கள் தங்­கள் கண்­ணெ­திரே ரசி­கர்­கள் இல்லை­யென்­றா­லும் விடா­மல் நடித்து முடிப்­பார்­கள். அவர்­க­ளின் அந்த உழைப்­பை­யும் கலை தொடர்­பான அர்ப்­ப­ணிப்­பை­யும் கண்டு வெகு­வாக வியந்­தி­ருக்­கி­றேன். அரி­தா­ரம் பூசி மேடை­யே­றும் போது ஒரு மாதிரி காட்சி அளிப்­ப­வர்­கள், நாட­கம் முடிந்­த­தும் அடை­யா­ளமே தெரி­யாத வகை­யில் மாறிப் போவார்­கள். மேடையை விட்டு இறங்­கி­ய பின்னர் அரி­தா­ரத்­தைக் கலைத்­த­தும் அந்­தக் கலை­ஞர்­க­ளின் வாழ்க்கை வேறு வித­மாக இருக்­கும். அந்த வாழ்க்­கை­யைப் பதிவு செய்­யும் முயற்­சி­தான் 'பஃபூன்'," என்று விளக்­கம் அளிக்­கும் அசோக் வீரப்­பன், இந்­தக் கதைக்கு வைபவ் மிகப் பொருத்­த­மாக அமைந்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

அவ­ரி­டம் இந்­தப் படத்­தின் கதையை முதல் முறை விவ­ரித்­த­போது, இது­வரை தாம் கிரா­மத்­துப் பின்­னணி கொண்ட கதை­யில் நடித்­த­தில்லை என்­றார். அதே­ச­ம­யம் கதை மிக­வும் பிடித்­தி­ருப்­பதா­க­வும் கூறினார்.

"அதன் பிறகு இரு­வ­ருமே அதி­கம் யோசிக்­க­வில்லை. படப்­பி­டிப்பு எப்­போது என்று வைபவ் கேட்க, நானும் அதற்குத் தயார் என்று சொல்ல, பணி­கள் தொடங்­கின. அவர் ஏற்­றுள்ள கதா­பாத்­தி­ரம் கொஞ்­சம் கன­மா­னது. அதே­ச­ம­யம் நகைச்­சு­வை­யும் தேவை. வைபவ் நிச்­ச­யம் இதில் சாதிப்­பார் என்று மன­தார நம்­பி­னேன். எனது எதிர்­பார்ப்பு வீண்­போ­க­வில்லை.

"அவ­ரும் நாட­கங்­களை அரங்­கேற்­றிய குடும்­பத்­தில் இருந்து வந்­த­வர். சில நாட­கங்­களில் இடம்­பெ­றும் கோமாளி கதா­பாத்­தி­ரம் அனைவரையும் வெகு­வா­கக் கவ­ரும். அந்த வேடத்­தில் நடிப்­ப­வர் எல்­லோ­ரி­ட­மும் பாராட்­டு­க­ளைப் பெறு­வர். வைபவ் அப்­ப­டிப்­பட்ட ஒரு கதா­நா­ய­கன். உணர்­வுபூர்­வ­மாக நடித்­த­ப­டியே நகைச்­சு­வை­யி­லும் அசத்­து­வார். இந்­தக் கூற்றை எனது படத்­தி­லும் அவர் நிரூ­பித்­துள்­ளார்," என்று பாராட்­டு­கி­றார் இயக்­கு­நர் அசோக் வீரப்­பன்.

'நட்பே துணை' மூலம் இளை­யர்­க­ளைக் கவர்ந்த அனாகா தான் இப்­ப­டத்­தின் கதா­நா­யகி. மேலும் 'ஆடு­க­ளம்' ஜெய­பா­லன், நரேன் ஆகி­யோ­ரும் உள்­ள­னர். எம்.பி.விஸ்­வ­நா­தன் என்ற நாட­கக் கலை­ஞர் வைப­வுக்கு தந்­தை­யாக நடித்­துள்­ளார்.

"நடி­கர் சங்­கத்­தில் ஏரா­ள­மான நாட­கக் கலை­ஞர்­க­ளின் விவ­ரங்­களை பாது­காத்து வைத்­துள்­ள­னர். அவர்­கள் அனை­வ­ருமே தங்­களை அறி­மு­கப்­ப­டுத்­திக்கொள்­ளும் வித­மாக சிறு காணொ­ளிப் பதிவை சங்­கத்­தி­டம் அளித்­துள்­ள­னர். அப்­படி­யொரு காணொ­ளிப் பதிவைப் பார்த்­து­த்தான் விஸ்­வ­நா­தன் சாரை தேர்வு செய்­தேன்.

"பல ஆண்­டு­க­ளாக முயற்சி செய்­தும் சினிமா வாய்ப்பு அமை­ய­வில்லை. கடைசி காலத்­தி­லும் இந்த ஆசை நிறை­வே­றா­மல் இறந்துபோவோம் என்று நினைத்­தா­ராம். ஆனால் என் மூலம் தனது கனவு நிறை­வே­று­வது தாம் எதிர்­பா­ராத ஒன்று என நெகிழ்ந்­தார். அற்­பு­த­மான நடிப்­பை­யும் வெளிப்­ப­டுத்தி உள்­ளார்," என்று சொல்­லும்­போது அசோக்­கின் குர­லும் நெகிழ்­கிறது.

கார்த்திக் சுப்புராஜ்தான் 'பஃபூன்' படத்தை தயாரிக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!